திறமையான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து
மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்க வேண்டும் என்பதற்காகவே
ஆசிரியர் தகுதித்
தேர்வு அறிமுகம்
செய்யப்பட்டது. இருப்பினும் கடந்த ஆண்டும் இந்த
ஆண்டும் ஆசிரியர்
தகுதித் தேர்வு
பற்றிய அறிவிப்பே
வெளிவராமல் உள்ளது.
தேர்வு நடத்தப்படாததன் காரணம் என்ன? தேர்வுக்காக இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்பது குறித்து காணலாம். ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மூலம் 2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட், 2015ஆம் ஆண்டு வரை தேர்ச்சி பெற அவகாசம் கொடுக்கப்பட்டது. அந்த காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையில் மற்றொரு வாய்ப்பிற்காக காத்திருக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் செய்வதறியாது திகைக்கின்றனர் 2012 ஆம் ஆண்டு முதல் தகுதித் தேர்வு நடைபெற்று வருகின்றது. 2012 ல் இரு முறையும் 2013 அம் ஆண்டு ஒரு முறையும் தேர்வு நடந்தது. தகுதித் தேர்வின் மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்வதிலும் அதில் பின்பற்றப்படும் முறைகள் குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இது குறித்து தொடுக்கப்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ள காரணத்தினால் 2014ஆம் ஆண்டு தேர்வு குறித்த அறிவிப்பே வெளியாகாமல் இருக்க, 2015 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு நேரமும் நெருங்கி வருகிறது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர்
சபிதாவிடம் விளக்கம் கேட்டபோது நீதிமன்ற வழக்குகள்
காரணமாகவே அறிவிப்பு
வெளியாகாமல் இருப்பதாகவும், இந்தாண்டிற்கான
அறிவிப்பு விரைவில்
வெளியாகும் என்றும் கூறியுள்ளார். தனியார் பள்ளி
ஆசிரியர்களுக்கான அவகாசம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்த
விளக்கமேதும் கொடுக்கப்படவில்லை. இதனிடையே,
இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும், வெயிட்டேஜ் முறை
நீக்கப்பட வேண்டும்
எனத் தொடுக்கப்பட்ட
வழக்கில் தமிழக
அரசு பதிலளிக்க
மார்ச் 30ஆம்
தேதி வரை
அவகாசம் கொடுத்துள்ளது
உச்சநீதிமன்றம்.
ஆதிதிராவிட/ கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணியிடங்களை விரைந்து நிரப்பகோரி தொடர் போராட்டம்
ReplyDeleteஅனைத்து சகோதர / சகோதரிகளுக்கும் வணக்கம்...
தமிழக அரசின் ஆதிதிராவிட / கள்ளர் சீரமைப்பு நலப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. 2013 ம் ஆண்டுதான் சுமார் 669 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆதிதிராவிடநலப்பள்ளிகளிலும் சுமார் 74 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கள்ளர் நலப்பள்ளிகளிலும் அந்தந்த சமூகத்தினற்கு முன்னுரிமை அளித்து நிரப்பப்படும் என்று 21.08.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. ஆனால் வேறு சமூகத்தினை சார்ந்த ஒரு சில சுயநலவாதிகள் நம்முடைய உரிமையை பறிக்க வழக்கு தொடர்ந்து நமக்கான உரிமையை பெற விடாமல் தடுத்து வைத்து உள்ளனர். இந்த வழக்கினை காரணம் காட்டி ஆசிரியர் தேர்வு வாரியமும் நலத்துறையும் நமக்கான உரிமையை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவது வேதனையாக உள்ளது. இதனால் நாமும் கடந்த ஆறு மாதமாக அமைதியான முறையில் நமது கோரிக்கையை மனுவாகவும் உண்ணாவிரத போராட்டம் மூலமாகவும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். ஆனால் நமது உரிமையை பெற இயலவில்லை. இது அரசுக்கு நமது மீதும் நலத்துறை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மீதும் அக்கறையின்மையை காட்டுகிறது. ஆனால் இதே நாளில் வெளியான பள்ளிகல்வித்துறை பணியிடங்கலினை மட்டும் நிரப்பியுள்ளனர். அதற்கும் வழக்கு தொடரப்பட்ட போது அரசு உடனடியாக வழக்கினை முடித்து பணியமர்த்தினர்.ஆனால் நமது வழக்கினை கண்டுகொள்ளவில்லை என்பது அரசின் நிலைப்பாடு சந்தேகப்படவைக்கிறது. ஆகையால் தோழர்களே விழித்தெழுங்கள் காலம்கடந்து செல்லும்முன் உரிமையை பெற ஒன்று கூடுங்கள். அலட்சியம் நம்மளை படும் பாதாளத்தில் தள்ளிவிடும் என்பது உண்மை. தோழர்களே வரும் திங்கள் (23.03.2014) முதல் நமது உரிமையை பெற தொடர் போராட்டம் செய்வோம் அனைவரும் சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் முன் ஒன்று கூடுங்கள் .... நமது உரிமையை பெற்று தரும்வரை போராட்டம் நடத்துவோம்.. அனைவரும் ஆதரவும் தங்களின் பங்களிப்பும் வழங்க வேண்டும். இந்த போராட்டம் நமது இறுதி கட்ட முயற்சி வெற்றி பெறாமல் திரும்புவது இல்லை என்ற முடிவோடு வாருங்கள்.அரசு வழக்கறிஞர் ஆஜராகி நமது உரிமையை நிலைநாட்ட கோரிக்கை விடுப்போம். அரசு நமக்காக அறிவித்த பணியிடங்களை நமக்கு அளிக்க அதுவும் விரைந்து அளிக்க கோரிக்கை விடுப்போம். நமது நோக்கம் அரசினை நமது பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கண்டு நமது பணிநியமனத்தினை நமக்கே உறுதிபடுத்தி விரைந்து முடிக்க வேண்டும் என்பதேயாகும். ஒவ்வொருவரும் தவறாமல் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கின்றோம்.
அனைவரும் வருக! ஆதரவு தருக!
இப்படிக்கு,
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற (SC&SCA மற்றும் பிரமலை-கள்ளர்) இடைநிலை ஆசிரியர்கள்,
தமிழ்நாடு.
தொடர்புக்கு :-
ஜெகநாதன் மதுரை – 9442880680
ஹரிகிருஷ்ணன் ராமநாதபுரம் –
மதன்பாண்டி மதுரை- 9865966398, 9629954949
ரமேஷ் நாமக்கல்-9942015830
சிவபிரகாஷ் கோவை –7708058814
பழனி திருவண்ணாமலை-9524805873