Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET வெயிட்டேஜால் பாதிப்பு - பாதிக்கப்பட்டோரின் மனு உச்சநீதிமன்றம் சென்றடைந்தது.

           எல்லாத்தகுதி இருந்தும் வெய்ட்டேஜால் ஆசிரியர் பணி இழந்தேன்; பாதிக்கப்பட்டோரின் மனு உச்சநீதிமன்றம் சென்றடைந்தது.

          2013ம் ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி 96 மதிப்பெண்கள் பெற்றும் ஆசிரியராகுவதற்கு உரிய அனைத்து தகுதிகள் இருந்தும் அரசின் வெய்ட்டேஜ் என்னும் தகுதிகான் முறையினால் பாதிக்கப்ப்பட்ட பலரும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழக மாநில தலைவர் மற்றும்  மாநிலப்பொருளாளர் அவர்களின் ஆலோசனையின் படி தங்கள் நிலை குறித்து 200க்கும் மேற்பட்டேர் மனு எழதினர் அம்மனுக்கள் உச்சநீதிமன்றம் சென்றடைந்துள்ள.


           ஒரு ஆசிரியை 2012ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் 88மார்க் எடுத்துள்ளார் அப்போது 5சதவீதம் மதிப்பெண் தளர்வு அளித்திருந்தர் அவரது நிலை மாறியிருக்கும்..தற்போது 2013ம் ஆசிரியர் தகுதித்தேர்வில் 96 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் மேலும் 7வருட பணிஅனுபவம் பெற்றுள்ளார்,  5 வருட சீனியரிட்டியும் பெற்றுள்ளார். இவ்வளவு திறமை இருந்தும் தன் ஆசிரியர் பணி பறிபோனது வெய்ட்டேஜ் என்னும் தவறான அனுகுமுறையால் ஆசிரியர் பணி கிடைக்காமல் போனது என்றும் அடுத்த பணிநியமனங்களில் முன்னுரிமை அளிக்கப்பட நடவடிக்கை எடுக்க கோரி தன் கீழ்கண்ட ஆவணங்களை இணைத்து அனுப்பியுள்ளனர்.....


Thanks To

Mrs. Puvaneshvari
















3 Comments:

  1. ஆதிதிராவிட/ கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணியிடங்களை விரைந்து நிரப்பகோரி தொடர் போராட்டம்
    அனைத்து சகோதர / சகோதரிகளுக்கும் வணக்கம்...
    தமிழக அரசின் ஆதிதிராவிட / கள்ளர் சீரமைப்பு நலப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. 2013 ம் ஆண்டுதான் சுமார் 669 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆதிதிராவிடநலப்பள்ளிகளிலும் சுமார் 74 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கள்ளர் நலப்பள்ளிகளிலும் அந்தந்த சமூகத்தினற்கு முன்னுரிமை அளித்து நிரப்பப்படும் என்று 21.08.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. ஆனால் வேறு சமூகத்தினை சார்ந்த ஒரு சில சுயநலவாதிகள் நம்முடைய உரிமையை பறிக்க வழக்கு தொடர்ந்து நமக்கான உரிமையை பெற விடாமல் தடுத்து வைத்து உள்ளனர். இந்த வழக்கினை காரணம் காட்டி ஆசிரியர் தேர்வு வாரியமும் நலத்துறையும் நமக்கான உரிமையை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவது வேதனையாக உள்ளது. இதனால் நாமும் கடந்த ஆறு மாதமாக அமைதியான முறையில் நமது கோரிக்கையை மனுவாகவும் உண்ணாவிரத போராட்டம் மூலமாகவும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். ஆனால் நமது உரிமையை பெற இயலவில்லை. இது அரசுக்கு நமது மீதும் நலத்துறை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மீதும் அக்கறையின்மையை காட்டுகிறது. ஆனால் இதே நாளில் வெளியான பள்ளிகல்வித்துறை பணியிடங்கலினை மட்டும் நிரப்பியுள்ளனர். அதற்கும் வழக்கு தொடரப்பட்ட போது அரசு உடனடியாக வழக்கினை முடித்து பணியமர்த்தினர்.ஆனால் நமது வழக்கினை கண்டுகொள்ளவில்லை என்பது அரசின் நிலைப்பாடு சந்தேகப்படவைக்கிறது. ஆகையால் தோழர்களே விழித்தெழுங்கள் காலம்கடந்து செல்லும்முன் உரிமையை பெற ஒன்று கூடுங்கள். அலட்சியம் நம்மளை படும் பாதாளத்தில் தள்ளிவிடும் என்பது உண்மை. தோழர்களே வரும் திங்கள் (23.03.2014) முதல் நமது உரிமையை பெற தொடர் போராட்டம் செய்வோம் அனைவரும் சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் முன் ஒன்று கூடுங்கள் .... நமது உரிமையை பெற்று தரும்வரை போராட்டம் நடத்துவோம்.. அனைவரும் ஆதரவும் தங்களின் பங்களிப்பும் வழங்க வேண்டும். இந்த போராட்டம் நமது இறுதி கட்ட முயற்சி வெற்றி பெறாமல் திரும்புவது இல்லை என்ற முடிவோடு வாருங்கள்.அரசு வழக்கறிஞர் ஆஜராகி நமது உரிமையை நிலைநாட்ட கோரிக்கை விடுப்போம். அரசு நமக்காக அறிவித்த பணியிடங்களை நமக்கு அளிக்க அதுவும் விரைந்து அளிக்க கோரிக்கை விடுப்போம். நமது நோக்கம் அரசினை நமது பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கண்டு நமது பணிநியமனத்தினை நமக்கே உறுதிபடுத்தி விரைந்து முடிக்க வேண்டும் என்பதேயாகும். ஒவ்வொருவரும் தவறாமல் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கின்றோம்.
    அனைவரும் வருக! ஆதரவு தருக!
    இப்படிக்கு,
    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற (SC&SCA மற்றும் பிரமலை-கள்ளர்) இடைநிலை ஆசிரியர்கள்,
    தமிழ்நாடு.
    தொடர்புக்கு :-
    ஜெகநாதன் மதுரை – 9442880680
    ஹரிகிருஷ்ணன் ராமநாதபுரம் – 
    மதன்பாண்டி மதுரை- 9865966398, 9629954949
    ரமேஷ் நாமக்கல்-9942015830
    சிவபிரகாஷ் கோவை –7708058814
    பழனி திருவண்ணாமலை-9524805873

    ReplyDelete
  2. nanum epadi pathika patavarkalil oruvan....

    ReplyDelete
  3. first tetla88 retestla 89...2013 la 92 but weightage markla job kidaikla...

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive