Home »
» Safety measures in exam centers
பத்திரிக்கைச் செய்தி
தருமபுரி மாவட்ட தேர்வு மையங்களில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற உள்ள மார்ச்/ஏப்ரல் 2015 பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு 5.3.2015 முதல் 56 மையங்களிலும் எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு 19.3.2015 முதல் 72 மையங்களிலும் நடைபெற உள்ளன. தேர்வுப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து நிலை அலுவலர்களும் விழிப்புடன் செயல்படவேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார். தேர்வு மையங்கள் அனைத்திலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. அனைத்து தேர்வு மையங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் 24 மணி நேரமும் காவலில் உள்ளார்கள். இதுதவிர தீவிபத்து போன்ற நிகழ்வுகளை தடுக்கும் வகையில் தீயணைப்பு சாதனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் கூடுதலாக ஒவ்வொரு தேர்வு மையத்திலும் 2 பணியாளர்கள் காவல் பணியில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்வு முடியும்வரை அனைத்து நாட்களும் சுழற்சி முறையில் பள்ளியைச் சுற்றி கண்காணிப்பார்கள். தேர்வு மையத்திற்குள் வெளியாட்கள் யாரும் உள்ளே வரக்கூடாது என எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கு தொடர்பில்லாத எவரேனும் தேர்வு நடைbறுபம் பகுதிக்குள் வர முயற்சித்தால் அவர்கள் மீது காவல் துறையின் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு நடைபெறும் நாட்களில் காவல் துறையினர் ரோந்து சுற்றி வருவார்கள். தேர்வுப் பணிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் நடந்து கொள்வோர், சமூக விரோத செயல்களைத் தூண்டுவோர், விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட முயற்சிப்போர், வதந்திகள் பரப்புவோர் காவல் துறையின் மூலம் கண்டறியப்பட்டு அவர்கள் தண்டனைக்குட்படுத்தப்படுவதோடு சிறையில் அடைக்கப்படுவார்கள். மேலும் தேர்வு நாட்களில் மாணவர்களுக்கு ஏதேனும் உடல் நலக் குறைபாடு எற்பட்டால் உடனடியாக அவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்கும் வகையில் 10 தேர்வு மையங்களுக்கு ஒரு வாகனம் வீதம் நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர சூழல் குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்மந்தப்பட்ட பள்ளிக்கு தயார்நிலையில் உள்ள மருத்துவக் குழு உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டு உரிய சிகிச்சை வழங்கப்படும். தேர்வு நாட்களில் தேர்வு மையங்கள் அமைந்துள்ள இடங்களில் தேர்வர்களை இறக்கிவிடவும், ஏற்றிச் செல்லவும் அனைத்து பேருந்து ஓட்டுநர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் தங்கு தடையின்றி மின்சாhம் வழங்க மின்வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுத் தேர்வு எழுத உள்ள தேர்வர்கள் எவ்வித பதற்றமும் இன்றி தேர்வில் முழு கவனம் செலுத்தி நல்ல முறையில் தேர்வு எழுத வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...