மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட H-1B விசா விண்ணப்பங்களை வரும் ஏப்ரல் 1 முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என அமெரிக்கா அறிவித்து உள்ளது.
வரும் 2016-ம் ஆண்டுக்கான பணியாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு 65,000 இந்தியர்களுக்கு அங்கு சென்று வேலை செய்வதற்கான விசா வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இது தவிர அமெரிக்காவில் உயர் கல்வி முடித்த 20000 பேருக்கும் அங்கு சென்று வேலை செய்வதற்கு விசா வழங்கப்பட இருக்கிறது. H-1B விசாவிற்கு விண்ணப்பம் செய்பவர்கள் அங்குள்ள நிறுவனங்களில் வேலை செய்வதற்காக தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விசாவை பயன்படுத்தி அதிகபட்சமாக 6 ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி வேலைப்பார்க்க முடியும். குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிகமான விண்ணப்பங்கள் வரும் பட்சத்தில் குலுக்கல் முறையில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...