Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர் பயிற்றுநரா?

1. ஒரு சிறந்த ஆசிரியர் பயிற்றுநருக்கு மிகவும் முக்கியானது Planner. ஒரு வாரத்தில் தாம் என்ன செய்யப்போகிறோம் என்பதற்கான திட்டம்.
திட்டத்தில் மாற்றம் வந்தால் அதனை அங்கே குறிப்பிட்டு அக்குறிப்பிட்ட பணி எப்போது செய்ய முடியும் என்பதனையும் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
2. இரண்டாவது டைரி. ஒவ்வொரு நாள் பணிகளையும் மிகத்தெளிவாக நாம் என்ன செய்தோம் என்பதனை எழுதுவது.
எந்த பள்ளிக்கு சென்றோம். அந்த பள்ளியில் நம் பணி, ஆசிரியர்கள் கூறியது, மாணவர்களின் பெயர்களுடன் தாங்கள் சந்தித்த புதுமை................................. பல.
3. ஆசிரியர் பயிற்றுநர் பள்ளி பார்வை படிவம். ஒவ்வொரு மாதம் முடிந்தவுடன் அதனை ஒன்றாக சேர்த்த தைத்து புத்தக வடிவில் மாதத்தின் பெயரிட்டு அனைத்து பார்வை படிவத்திலும் ஒப்பம் பெற்று பத்திரமாக பைல் பண்ண வேண்டும்
4. ஆசிரியர்களை தொடர்பு கொள்ளும் திறன் ஆசிரியர்களின் அனைத்து தகவல்களை அப்டேட் செய்து கணிப்பொறியில் கூகுள் டிரைவில் சேமித்து வைத்து அதனை ஷேர் செய்துவிடவேண்டும்.
மேற்கண்ட 4 விஷயங்கள் மிக முக்கியமான ஒன்று.
இதன் பயன்கள்
1. நம் பணிகளை கவனிக்கும்போது அலுவல பணிகளுக்கான அழைக்கும்போது , அக்குறிப்பிட்ட நேரத்தை டைரியில் குறித்து அலுவலக பணிக்காக வந்ததை குறிப்பிடவேண்டும்.
உதாரணமாக SLAS டைப் செய்ய அலுவலகம் வந்தால் எத்தனை படிவங்கள் அடிக்கப்பட்டது போன்ற விவரங்கள் பதியப்படவேண்டும்.
வார இறுதியில் வெள்ளியன்று நடக்கும் கூட்டத்தில் பொறுப்பு மேற்பார்வைாயளரிடம் கையெழுத்து பெற்று விடுவது நல்லது.
இப்படி தங்களுக்கு ஒதுக்கின்ற பணிகள் செய்யும் போது ஒரு வேலை பள்ளி பார்வை குறைந்தால் ...... அதற்காக நீங்கள் தண்டிக்கப்பட்டாலோ அல்லது மாநில அளவில் உள்ள அதிகாரிகள் தாங்கள் சிறந்த முறையில் வேலை செய்தும் குறை கூறினால் சட்டப்படி வழக்கு தொடரலாம், .
இந்த டைரி ஒன்றே போதுமானது
தாங்கள் இரவு நேரங்களில் அலுவலக பணி செய்திருந்தாலும் அதனை குறிப்பிட்டு கையெழுத்து பெற வேண்டும்.
2. உண்மையில் சிறந்த முறையில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளிக்கு மற்றும் பயிற்சி்கள் போன்றவற்றில் புதுமையை புகுத்தி ஆசிரியர்களை தன் வசம் ஈர்த்து வைத்திருப்பர்.
3. மாவட்ட அளவில் தரப்படும் பயிற்சிகளை அப்படியே ஒப்பிக்காமல் புதிய தேடுதலை இணையம் மூலம் பெற்று சிறப்பான பயிற்சியை கொடுக்க முயற்சிக்கலாம்.
4. சம்பிரதாயத்திற்கு பள்ளி பார்வை என்ற போக்கில் ஆசிரியர் பயிற்றுநர்கள் இருக்கவே கூடாது. அப்படி இருந்தால் அவர்கள் பணியில் சிறக்க வாய்ப்பு இல்லை.
5. நமக்கு இடப்பட்ட பணிகளை நேர்மை தவறாமல் கடமையில் கண்ணும் கருத்துமாக பணியாற்றினாலே போதும்.
WE ARE NOT A TEACHERS....................
MORE THAN THAT
WE ARE THE ”TEACHERS TEACHER ”
- from அனைவருக்கும் கல்வி திட்டம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive