2014-ம் ஆண்டிற்கான மத்திய தேர்வாணையத்தின் முதன்மை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், குடிமைப் பணிக்கான மாதிரி ஆளுமைத் தேர்வு எண். 163/1, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை-28 காஞ்சி வளாகத்தில் அமைந்துள்ள அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில் நடத்தப்படும்.
மாணவ/மாணவியர்கள்
சேர்க்கைக்கான விண்ணப்பப்படிவம் முதன்மை தேர்வுக்கான முடிவுகள்
அறிவிக்கப்பட்டவுடன் இரண்டு அலுவலக வேலை நாட்களில் இப்பயிற்சி மைய
அலுவலகத்தில் வழங்கப்படும்.
தமிழ் நாட்டைச்
சார்ந்த அனைத்து மாணக்கர்களும் இப்பயிற்சிக்கு சேர தகுதியுடையவர்கள் ஆவர்.
இப்பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் தவிர இதர பயிற்சி மையத்தில் பயின்ற
மாணவ/மாணவியர்களும், எந்த பயிற்சி மையத்திலும் சேராமல் தனியே தேர்வு எழுதி
தேர்ச்சி பெற்றவர்களும் பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவர்.
தகுதிபெற்ற
மாணக்கர்கள் இப்பயிற்சி மையத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்,
மூன்று புகைப்படம், முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல்
ஆகியவற்றை சமர்ப்பித்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
மத்திய
தேர்வாணையம் நடத்தும் நேர்காணலை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வகையில்
தகுதி பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு, இப்பயிற்சி
மையத்தில், மூத்த இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி அலுவலர்களையும்,
கல்லூரிகளின் பேராசிரியர்களையும் கொண்ட குழு அமைக்கப்பட்டு, மாதிரி ஆளுமைத்
தேர்வும், சிறப்பு வகுப்புகளும், நடத்தப்படுகிறது. ஆளுமைத் தேர்வுக்கு,
புது டெல்லி செல்லும் மாணவ/மாணவியர்களுக்கு பயணப்படியாக ரூ. 2000/-
வழங்கப்படுகிறது. மேலும் பத்து நாட்கள் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி ஆளுமைத்
தேர்வில் கலந்து கொள்ள ஏற்பாடுகளும் இப்பயிற்சி மையத்தால் செய்யப்பட்டு
வருகிறது.
2014-ம்
ஆண்டிற்கான மத்திய தேர்வாணைய குழுவின் முதன்மை தேர்வுக்கான முடிவுகள்
அறிவிக்கப்பட்டவுடன், மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்படும் நாட்கள் பற்றி
விவரம் இப்பயிற்சிமைய இணைய தளத்தில் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
முதல்வர்,
அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம்,
சென்னை-28. தொலைபேசி எண். 044-24621475.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...