ராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாகவுள்ள
மீன்வள மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் க. நந்தகுமார்
புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
ராமநாதபுரம் மாவட்ட மீன்வள உதவி இயக்குநர் அலுவலகங்களில் காலியாகவுள்ள
மீன்வள மேற்பார்வையாளர் தரம்-2க்கு 4 பணியிடங்கள் இனச்சுழற்சி முறையில்
(பொது-முன்னுரிமை) அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு
அலுவலகத்தில் பட்டியல்கள் பெறப்பட்டுள்ளன. அத்துடன் விண்ணப்பங்கள் பெற்று
நேர்காணல் நடத்தப்பட வேண்டும். எஸ்.சி. மற்றும் எஸ்.டி. வயது 35,
எம்.பி.சி. வயது 32, பி.சி. வயது 32. ஓ.சி. வயது 30. இக் குறிப்பிட்ட வயது
கடந்த 1.1.2015இன்படி இருக்க வேண்டும். மேலும் கல்வித் தகுதியாக 10 ஆம்
வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நீந்துதல், மீன்பிடி வலை பின்னுதல்
மற்றும் மீன்பிடி வலை போடுதல் போன்றவற்றில் நல்ல தேர்ச்சி மற்றும் அனுபவம்
இருத்தல் அவசியமாகும்.
எனவே இதற்கான தகுதியுடையவர்கள் ஒரு வார
காலத்துக்குள் விண்ணப்பத்தினை மீன்வள துணை இயக்குநர் அலுவலகம் (மண்டலம்)
விருந்தினர் மாளிகை அருகில், ஆட்சியர் அலுவலக கட்டட வளாகம், ராமநாதபுரம்
என்ற முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...