பத்தாம் வகுப்பு விடைத்தாள் பாதுகாப்பு
மையங்களை தேர்வு செய்வதில், இறுதி சமயத்தில், பள்ளிகளின் ஒத்துழைப்பு
இன்மையால், அதிகாரிகள் அல்லல்படும் நிலை ஏற்பட்டது.
மாநிலம் முழுவதும் பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வுகள் துவங்கின. கோவை மாவட்டத்தில் 138 மையங்களில், 46 ஆயிரத்து
800 மாணவர்கள் பங்கேற்று தேர்வெழுதினர். இத்தேர்வுகள் முடிந்ததும், 21
வழித்தட அதிகாரிகளின் பொறுப்பில், தமிழ் முதல் தாளுக்கான விடைத்தாள்கள்
ஒருங்கிணைக்கப்பட்டது.
மதிப்பீட்டு பணிகளுக்கு முன்பு, விடைத்தாள்களை
கலக்கி கட்டி பாதுகாப்பு மையங்களில் வைக்க வேண்டும். கலக்கி கட்டவும்,
பாதுகாப்பு மையமும் உரிய வசதிகளுடன் கூடிய பள்ளிகளை தேர்வு செய்வது
அவசியம். அரசு பள்ளிகளில், பாதுகாப்பு வசதிகள் இல்லை என்பதால், மாவட்ட
கல்வி அதிகாரிகள் தனியார் பள்ளிகளை நாடவேண்டிய அவலநிலை உள்ளது.
கோவையில், முதல் தாளுக்கான விடைத்தாள்
வைப்பதற்கு பள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைக்காமல், விடைத்தாள் பாதுகாப்பு
மையத்தை இறுதி செய்வதில் அதிகாரிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. கண்ணாடி கதவுகள்
என்றும், சி.சி., டிவி வசதி இல்லை என பல்வேறு காரணங்கள் கூறி பள்ளிகள்
நழுவியதால், அதிகாரிகள் சிரமப்பட்டனர். பணிச்சுமை, அலைச்சல்களுக்கு
மத்தியில், இறுதியாக, புரூக் பீல்டு ரோட்டில் அமைந்துள்ள தனியார்
பள்ளியும், டவுன்ஹால் பகுதியிலுள்ள தனியார் பள்ளியும் மையங்களாக தேர்வு
செய்யப்பட்டன.
அரசு பள்ளிகளில், ஏக்கர் கணக்கில் இடம்
இருக்கும் பொழுது, போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்காத பள்ளிக்
கல்வித்துறை அதிகாரிகளால், இறுதி சமயங்களில் மாவட்ட கல்வித்துறை
அதிகாரிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. வரும் கல்வியாண்டில்,
குறிப்பிட்ட அரசு பள்ளிகள் தேர்வுசெய்து, உரிய வசதிகளை ஏற்படுத்தி, நிரந்தர
பாதுகாப்பு மையங்களாக அறிவிப்பது அவசியம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...