திருப்புத்தூர்:
திருப்புத்தூர் அருகே அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் மயங்கிய நிலையில்
மெதுவாக ஓட்டிச்சென்று பஸ்சை நிறுத்தி னார். விபத்தின்றி பயணிகள் தப்பினர்.
''மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம். என்னை தூங்க விட்டால் போதும்,'' என
டிரைவர் கெஞ்சினார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அரசு
போக்குவரத்து கழக டெப்போவைச் சேர்ந்த டிஎன் 57/ 2128 என்ற அரசு பஸ்,
பழநியிலிருந்து காரைக்குடிக்கு சென்றது. டிரைவர் தியாகராஜன்,38. கண்டக்டர்
மாரிமுத்து பணியில் இருந்தனர். மதியம் 1.15 மணிக்கு சிங்கம்புணரியிலிருந்து
திருப்புத்தூருக்கு செல்லும் போது, தியாக ராஜன் தனக்கு உடல்நிலை சரியில்லை
மாற்று டிரைவர் ஏற்பாடு செய்தால் நல்லது, என்று பயணிகளிடம் கூறினார்.
பின்னர் தண்ணீர் குடித்து விட்டு 'திருப்புத்தூரில் நிறுத்தி விடுகிறேன்,'
என்று கூறி பஸ்சை ஓட்டினார். வழியில் காளாப்பூர் அருகே டிரைவர் தியாகராஜன்
பஸ்சை மெதுவாக நிறுத்தி ஸ்டியரிங்கில் மயங்கி விழுந்தார். பஸ்சில் இருந்த
பயணிகள் பதறினர். பின்னர் தண்ணீர் தெளித்து, டிரைவரை பஸ்சின் சீட்டில்
படுக்க வைத்தனர். பயணியாக வந்த அரசு பஸ் டிரைவர் தங்கம், பஸ்சை
திருப்புத்தூருக்கு ஓட்டி வந்தார்.திருப்புத்தூர் பஸ் ஸ்டாண்டில் டிரைவர்
தியாகராஜனை சிகிச்சைக்கு அழைத்த போது, ''என்னை தூங்க அனுமதியுங்கள்
போதும்,'' என கூறியுள்ளார். பயணிகளை வேறு பஸ்சிற்கு மாற்றி, திருப்புத்தூர்
டெப்போவிற்கு பஸ் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தியாக ராஜனுக்கு உணவு
கொடுத்து தூங்க வைத்தனர்.
பயணி சக்திவேல்ராஜா: ''டிரைவர்
மூன்று நாட்களாக தொடர்ந்து பணியில் இருந்ததாகவும், தூங்காமல் உடல்
நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிவித்தார். பஸ்சில் இருந்த 25 பயணிகள் உயிர்
தப்பியது அதிர்ஷ்டம் தான். திருப்புத்தூர் டெப்போவிற்கு டிரைவரின் நிலைமை
குறித்து கூறி மாற்று டிரைவர் கேட்டபோது, விபத்து என்றால் தான் அனுப்ப
முடியும். மேலும் வேறு டெப்போவிற்கு நாங்கள் அனுப்ப முடியாது என்று மறுத்து
விட்டனர். பழநி டெப்போவில் பேசியபோது, சரியாக பதில் பேசாமல், டிரைவர்
வரட்டும் நடவடிக்கை எடுக்கிறோம், என்று கூறி விட்டு போனை வைத்து விட்டனர்.
பயணிகள் உயிரை மதிக்காமல் கலெக் ஷனுக்காக ஒரு டிரைவரை தொடர்ந்து பணியில்
அமர்த்தியது ஆபத்தானது,'' என்றார்.
தொடர்ந்து 3 நாள் 'டூட்டி!'
பழநி அரசு போக்குவரத்து கழக மேலாளர் பாலுச்சாமி: டிரைவர்
தியாகராஜன் நேற்றுமுன்தினம் பகல் 12.45 மணிக்கு பணிமுடித்துசென்றார்.
நேற்று காலை 9.45 மணிக்கு பணிக்கு வந்தார். திடீர் உடல் நலக்குறைவால்
மயங்கிவிட்டார். அவருக்கு பதிலாக மாற்று டிரைவரை அனுப்பி உள்ளோம். பயணிகள்
வேறுபஸ் மூலம் காரைக்குடிக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். டிரைவர்களுக்கு
போதுமான ஓய்வு நேரம் வழங்கப் படுகிறது. அதனை அவர்கள் பயன்படுத்தி கொள்ள
வேண்டும். அப்படி இல்லாதபோது இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து
விடுகிறது,' என்றார்.
'டிரைவர் வரட்டும்... அதிகாரிகள் நர... நர...'
*சம்பவம் குறித்து, பழநி டிப்போவில் கேட்டபோது, சரிவர பதிலளிக்காமல்,
'டிரைவர் வரட்டும்; நடவடிக்கை எடுக்கிறோம்' என கூறி, போனை வைத்துவிட்டனர்.
*பயணிகள் உயிரை மதிக்காமல், வசூலுக்காக, டிரைவரை, தொடர்ந்து பணியில் அமர்த்தியது எந்த வகையில் நியாயம்?
Thank to god all passengers are safe
ReplyDelete
ReplyDeleteஅவரும் மனிதன் தானே