மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் தில்லியில் செயல்பட்டு வரும் சென்ட்ரல்
பொல்யூஷன் கன்ட்ரோல் போர்டில் காலியாக உள்ள ரிசர்ச் அசோசியேட் மற்றும்
ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ரிசர்ச் அசோசியேட் மற்றும் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ
காலியிடங்கள்: 70.
1. ரிசர்ச் அசோசியேட் - 13
தகுதி: முன்னைவர் அல்லது எம்.இ அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
2. ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ - 57
தகுதி: அறிவியல் அல்லது சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் பட்டம் பெற்று
என்.இ.டி (ஜே.ஆர்.எஃப்) தேர்வில் தேர்ச்சி அல்லது ஏதாவது டிகிரியுடன் கேட்
தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.03.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.cpcb.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...