Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிற சங்கங்கள் அறிவித்துள்ள போராட்டங்களில் கலந்துக்கொள்ள போவதில்லை - அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

           இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் : CPS திட்டத்தை கைவிடவேண்டும் - அனைத்திந்திய ஆசிரியர் பேரவை சார்பில் மாண்புமிகு முதலமைச்சரிடம் நேரில் மனு

            10 - 03 - 2015 அன்று அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - இன் நிர்வாகிகள்  மாண்புமிகு முதலமைச்சர் திரு .ஓ.பன்னீர்செல்வம் அவர்களை அவர்களின் வீட்டில் பேரவையின் பொதுச் செயலாளர் திரு. செ.ஜார்ஜ் அவர்கள் தலைமையில்  சந்தித்தார்கள். அப்போது தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை  வழங்கவேண்டும் எனவும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் CPS ஓய்வுதிய திட்டத்தை கைவிட்டு பழைய  ஓய்வுதிய திட்டத்தை அமுல்படுத்த  வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் பிற சங்கங்கள் அறிவித்துள்ள போராட்டங்களில் கலந்துக்கொள்ள போவதில்லை எனவும் மாண்புமிகு முதலமைச்சரிடம் உறுதி அளிக்கப்பட்டது. 





         மேலும் முதல்வரிடம் பேரவையின் பொதுச்செயலாளர் திரு.செ.ஜார்ஜ் அவர்கள்  அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - இன் தலைமையில் தமிழ்நாடு பட்டதாரி மற்றும் பதவிஉயர்வு பெற்ற பட்டதாரி தமிழாசிரியர் கழகம், ஆசிரியர் முனேற்ற கழகம் ஆகிய சங்கங்கள் இணைந்து  JOINT ACTION COUNCIL OF TEACHERS ASSOCIATION (JACOTA ) என்ற புதிய அமைப்பை துவக்கி உள்ளதையும்  இந்த அமைப்பு பிற அமைப்புகள் அறிவித்துள்ள போராட்டத்தில் கலந்துக்கொள்ளாது எனவும் தெரிவித்தனர். மேலும் சில சங்கங்கள் தங்களுடன் இணைய பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார்.    
           அதனை கனிவுடன்  கேட்ட முதல்வர் அவர்கள் ஆசிரியர் சமுதாயத்திற்கு மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் செய்த எண்ணற்ற நலன்களை விவரித்தார்.      
            மேலும் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கப்படும் எனவும் விரைவில் தீர்வு காணப்படும் எனவும் மாண்புமிகு முதலமைச்சர் திரு .ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கூறினார்.
           மேலும் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் அவர்கள் மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களிடம் ஒரு கோரிக்கை மனுவினை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். 

பின்பு  அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - இன் நிர்வாகிகள் தலைமை செயலகம் சென்று மாண்புமிகு கல்வி அமைச்சர் திரு K .C . வீரமணி அவர்களை நேரில் சந்தித்தனர். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்  வழிகாட்டுதல் படி கோரிக்கை மனுவினை நேரில் கொடுத்தனர். அதனை பெற்றுக்கொண்ட  மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் அதில் உள்ள கோரிக்கைகளை முழுமையாக படித்துவிட்டு, தேவையான நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.  
மேலும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசு என்றும் ஆசிரியர்களின் நலன்களை காக்கும் எனவும் தெரிவித்தார்.  
சந்திப்பின் போது  அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - இன்  பொதுச் செயலாளர் திரு. செ.ஜார்ஜ் அவர்கள், மாநில துணைத்தலைவர் திரு.லக்ஷ்மணன்  அவர்கள்,  திரு.சிவாஜி அவர்கள், மாநில இணைப்பொதுச் செயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், மாநில செய்தி ஆசிரியர்  திரு.சரவணன் அவர்கள், தமிழ்நாடு பட்டதாரி மற்றும் பதவிஉயர்வு பெற்ற பட்டதாரி தமிழாசிரியர் கழகத்தின் செயலாளர்  திரு.குருராஜன் அவர்கள் தமிழ்நாடு அணைத்து நிலை ஆசிரியர் முன்னேற்ற கழக தலைவர் திரு.துரை ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive