Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தில் எய்ம்ஸ் கல்வி நிறுவனம்: மத்திய பட்ஜெட்.

           தமிழகத்தில் எய்ம்ஸ், மாணவர்களின் கல்வி உதவிக்கான புதிய அமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டு திட்டம் ஆகிய பலவித அம்சங்களுடன் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2015-2016 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட், நாடாளுமன்றத்தில், நிதியமைச்சர் அருண்ஜெட்லியால் தாக்கல் செய்யப்பட்டது.
 
              அதில், கல்வி தொடர்பாக இடம்பெற்ற அம்சங்கள் என்னென்ன என்பதைப் பற்றிய ஒரு சிறிய அலசல் தரப்பட்டுள்ளது. அவை, துறைரீதியான ஒதுக்கீட்டு விபரம் மத்திய அரசுக்கான ஒதுக்கீடு வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் கல்வி - ரூ.6,320 கோடி பள்ளிக் கல்வி மற்றும் கல்வியறிவு - ரூ.6,153 கோடி உயர்கல்வி - ரூ.25,700 கோடி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் - ரூ.3,835 கோடி அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி - ரூ.4,031 கோடி திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைதல் - ரூ.1,543 கோடி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு - ரூ.1,084 கோடி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு - ரூ.1,398 கோடி மாநிலங்களுக்கான ஒதுக்கீடு பள்ளிக் கல்வி மற்றும் கல்வியறிவு - ரூ.35,781 கோடி உயர்கல்வி - ரூ.1,060 கோடி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு - ரூ.8,999 கோடி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு - ரூ.119 கோடி.
வேறுசில முக்கிய அறிவிப்புகள்
* வேலை வாய்ப்பை பெறத்தக்க வகையிலான திறன் மேம்பாட்டு பயிற்சியை, நமது பணியாளர்களில், வெறுமனே 5%க்கும் குறைவானவர்களே பெறுகிறார்கள். எனவே, இந்தக் குறைபாட்டை நீக்கும் வகையில், பலவிதமான அமைச்சகங்களை உள்ளடக்கிய, ஒருங்கிணைந்த திறன் முன்முயற்சிக்காக, National Skill Mission என்ற அமைப்பு உருவாக்கப்படும்.
* கிராமப்புற இளைஞர்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் பொருட்டு, தீன்தயாள் உபாத்யாயா கிராமின் கவுஷால் யோஜனா என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
* கல்விக் கடன்கள், மாணவர் உதவித்தொகை திட்டங்கள் ஆகியவற்றை கண்காணித்து, நிர்வகிப்பதற்கு, Student Financial Aid Authority என்ற அமைப்பு தொடங்கப்படும். Pradhan Mantri Vidya Lakshmi Karyakram என்பதன் மூலமாக இந்த அமைப்பு இயங்கும்.
* கர்நாடகாவில் தொடங்கப்பட்டுள்ள ஐ.ஐ.டி. மற்றும் தன்பாத்திலுள்ள ஐ.எஸ்.எம். ஆகியவை, முழுமையான ஐ.ஐ.டி.களாக தரம் உயர்த்தப்படும்.
* தமிழ்நாடு, பஞ்சாப், ஜம்முகாஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் புதிய எய்ம்ஸ் கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும். பீகாரில், அதையொத்த கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும்.
* பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில், தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான ஒரு முதுநிலை பட்டப்படிப்பு கல்வி நிறுவனம் ஏற்படுத்தப்படும்.
* மராட்டியம், ராஜஸ்தான் மற்றும் சட்டீஷ்கர் ஆகிய மாநிலங்களில், தலா ஒன்று வீதம், பார்மசூட்டிகல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான புதிய தேசிய கல்வி நிறுவனம் தொடங்கப்படும் மற்றும் நாகலாந்து மற்றும் ஒடிசா மாநிலங்களில், அறிவியல் மற்றும் கல்வி ஆராய்ச்சி கல்வி நிறுவனம், தலா ஒன்று வீதம் தொடங்கப்படும்.
* கல்வி, சுகாதாரம், கிராமப்புற மேலாண்மை, வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாடு, பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றம், நீர்வளம் மற்றும் கங்கையைத் தூய்மைப்படுத்தும் திட்டம் ஆகியவற்றுக்கு, தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுவான மதிப்பீட்டின்படி, கல்வித்துறைக்கு, மத்திய அளவிலும் சரி, மாநில அளவிலும் சரி, குறைந்தளவு நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும், தேவையான அளவிற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive