போடியில் கடந்த
நான்கு நாட்களாக குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்பட்டு வரும் மின்தடை காரணமாக
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்கள் படிக்க முடியாத நிலையில் சிரமம்
அடைந்து வருகின்றனர்.
போடி நகராட்சி
பகுதியில் பழைய மின் கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணி
கடந்த 5 மாதங்களாக நடந்து வருகிறது. தற்போது பழைய ஆர்.எம்.டி.சி., தெரு,
மறவர்சாவடி தெரு, சுப்புராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்கம்பங்கள்
மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் காலை, மாலையில் மின்தடை
ஏற்பட்டு வருகிறது.
இப்பகுதியில்
பிளஸ் 2 , பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு படிக்கும் மாணவ,மாணவிகள்
அதிகம் பேர் உள்ளனர். காலை, இரவு நேரங்களில் தொடர் மின்தடை ஏற்பட்டு
வருவதால் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் படிக்க சிரமப்படுவதோடு, இரவு
நேரங்களில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
பொதுத்தேர்வுகள் முடியும் வரை அதிகாலை, இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுவதை
தவிர்க்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...