முதனிலை
கல்லூரிகளில் உதவிபேராசிரியர் பணியிடங்களுக்கு நியமிக்க நடத்தப்படும்
தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும்கடைசிதேதியை மார்ச் 23-ஆம் தேதி
நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து
கர்நாடக தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கர்நாடகத்தில் உள்ள
முதனிலை கல்லூரிகளில் 1298 உதவிபேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இப்பதவியில் நியமனம் பெறுவதற்கான தகுதித்தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது.
இத்துடன் கூடுதலாக 862 உதவிபேராசிரியர் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால்,
மொத்தம் 2160 பணியிடங்களுக்காக நடத்தப்படும் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்
கடைசிதேதியை பிப்.28-இல் இருந்து மார்ச் 23-ஆம் தேதிக்கு நீட்டிக்க
உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுப்பிரிவினர்
ரூ.2500, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ரூ.2 ஆயிரம் கட்டணமாக
செலுத்த வேண்டும். பணிவிவரங்கள், பாடப்பிரிவுகள், தேர்வுபாடங்கள் உள்ளிட்ட
விவரங்களை அறிய 080-23460460 என்ற தொலைபேசி அல்லது www.kea.kar.nic.in என்ற
இணையதளத்தை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...