செல்போனில் தகவல் திருட்டை தவிர்க்க கூகுள் நிறுவனம் ஆண்டிராய்டில், புதிய
பாதுகாப்பு வசதியான 'ஸ்மார்ட் லாக்' என்ற அப்-பை அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் செல்போனில் இருந்து தகவல்கள் திருடப்படுவதை தடுக்கலாம் என
கூறப்படுகிறது.
இந்த புதிய வசதி மூலம் உங்கள் கைகளிலோ, பாக்கெட்டிலோ அல்லது உடலின்
தொடர்புகொள்ளும் வகையில் செல்போன் இருந்தால் லாக் ஆகாமல் இருக்கும். அதே
சமயம் செல்போனை கிழே வத்துவிட்டால் உடனே லாக் ஆகிவிடும். இதன் மூலம்
செல்போனை வைத்துவிட்டு போன பின்னர் வேறு யாரும் செல்போனை பயன்படுத்த
முடியாத வகையில் இந்த அப்பை கூகுள் உருவாக்கியுள்ளது. இதனால் செல்போனிலில்
உள்ள முக்கிய தகவல்கள் பாதுகாக்கப்படும்.
ஆனால் செல்போனை பயன்படுத்துபவரின் உடலை உணர்ந்து கொள்ளாது என்பது
குறிப்பிடத்தக்கது. எனவே செல்போனை கிழே வைத்துவிட்டு மீண்டும் எடுக்கும்
போதும் அது லாக்கிலே இருக்கும். இந்த புதிய ஆண்ட்ராய்ட் அப் இன்னும்
அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. தற்போது கூகுளின் நெக்சஸ் 4 போனின்
5.0.1 வெர்ஷனில் இந்த புதிய வசதி உள்ளதாக கூறப்படுகிறது.
இச்செய்தியை கூகுள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் மிக
விரைவிலேயே அனைத்து ஆண்ட்ராயிட் பயனாளர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...