Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தற்போது உள்ள நடைமுறைக்கு ஏபில் அட்டை தேவையா? ஏபில் ஏன்?

1.மாணவர்கள் தன் சுய வேகத்தில் கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டது.
2. வகுப்புகளுக்கு முக்கியத்துவம் இல்லை. மாணவர்களின் அடைவுத்திறனே முக்கியம்
3. இதனால் 5ஆம் வகுப்புக்குள் எழுத்துக்கள் தெரியாத மாணவர்களே இருக்க முடியாது. அதாவது மிகவும் பின்தங்கி இருக்கும் 5 ஆம் வகுப்பு மாணவன் தன் திறன் 3ஆம் வகுப்பிற்குண்டான திறன் எனில் அவன் 3ஆம் வகுப்பு படிக்கலாம். அதற்காகதான் ஏணிபடிகள்.

4. ஒரு 2 ஆம் வகுப்பு மாணவன் திறன் இருந்தால் நேரடியாக ஏணிப்படிகளை முடித்து 3 ஆம் வகுப்பிற்கு கூட செல்ல முடியும்.
இப்படி மாணவர்களின் குறைந்த பட்ச கற்றல் அடைவை உறுதி செய்ய அப்போதைய Chennai Corporation Commissioner Mr.விஜயகுமார் IAS அவர்களால் உருவாக்கப்பட்டது.
ஏபில் ஏன் வேண்டாம்?
பின்னர் தமிழக மக்களால் சரியாக புரிந்துகொள்ளமுடியாமல்
இந்த ஏபில் முறையை ஜோக் செய்யும் அளவுக்கு சென்றது.
” உங்கள் மகள் என்ன படிக்கிறாள்? என்று கேட்டால் ...
1 ஆம் வகுப்பு ஆங்கிலம
2 ஆம் வகுப்பு கணிதம்
3 ஆம் வகுப்பு அறிவியல்
4 ஆம் வகுப்பு சமூகஅறிவியல்
மற்றும் தமிழ்
ஆனால் படிப்பது 5 ஆம் வகுப்பு ?.....................
இதனால் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்தது.
விழித்துக்கொண்ட அரசு என்ன செய்வது என்று புரியமால் கல்வி முறையை புரிய வைப்பதற்கு பதிலாக
அந்த அந்த குழந்தைகள் அந்த அந்த வகுப்பு பாடங்களை படிக்க வேண்டும் என கூறி ஏபில் முறையை புரிந்து கொள்ளாமல் ஒட்டு மொத்தமாக ஒரு நல்ல முறைக்கு வேட்டு வைத்தனர்.
இதன் மூலம் அவரவர்கள் கற்கும் வேகத்தில் கற்கலாம் என்ற இந்த ஏணிப்படியின் முறை அழிக்கப்பட்டது.
எனவே இந்த ஏபில் முறை இங்கேயே அடிபட்டு விட்டது.
5. மத்திய அரசின் நிதியை கல்விக்காக மாணவர்களுக்கு தரும் அனைத்தும் திட்ட நிதியில் இருந்து கொடுக்கப்படுவதால் அதிகமான பயிற்சிகளில் இருந்து ஆசிரியர்கள் தப்பினர்.
மேலும் புத்தகத்தில் உள்ள பாடங்களின்படி அட்டைகள் மற்றும் ஏணிகள் அச்சடிக்கப்பட்டு கொடுக்கப்பட்டது.
பாடப்பகுதிகளை அந்தந்த பருவங்களில் முடிக்கப்படவேண்டும் என ஆணையாக பிறப்பிக்கப்பட்ட பிறகும் , புத்கமே பயிற்சி ஏடாக தற்போது உள்ள போது இந்த அட்டைகள் தேவையா?
மாணவர்களின் கற்றல் அடைவுத்திறன் அவர்களின் சுய வேகத்தில் இருக்க வேண்டும் என்ற அடிப்படைகளுக்கான ஏணிகள் உருவாக்கப்பட்டது.
ஆனால் தற்போது மாணவர்களின் சுய வேகப்படி இல்லாத நிலையில் முப்பருங்களை முடித்து மாணவர்களை தயார் படுத்த கட்டாயப்படுத்தப்படுவதாலும், வாசிப்பு திறன் மற்றும் எழுதும் திறனை மேம்படுத்த பழைய முறைகளே உதவும் என்ற காரணத்தால் இந்த ஏணிபடிகளையும் அட்டைகளையும் ஏறக்கட்டினால் மட்டுமே தமிழக பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை கூடும்.
6. தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் தொடக்கப்பள்ளிகளில் இருப்பதால் தற்போது வழங்கி வரும் ஆங்கில பயிற்சிகள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதால் சிறப்பான அனைத்து வசதிகளையும் உள்ளடிக்கிய பயிற்சி கூடங்களை அமைத்து பயிற்சிகளை கொடுத்து
உடனடியாக ஆங்கில பள்ளிகளை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது தமிழ்நாடு
7. ஆங்கிலம் வேண்டாம் என்று சொல்லும் சங்கங்கள் சற்று யோசித்து பார்த்தால் தெரியும்.... ஆங்கில பள்ளிகளின் மோகத்தால் சேர்க்கை குறைந்து செல்கிறது. எனவே அனைத்து தரப்பினரும் அரசியல் லாபம் கருதாமல் ஆசிரியர்களின் பிற்கால நலனை எண்ணி இதனை செயல்படுத்துதல் நலம்.
8. இந்த அட்டைகளையும் ஏணிப்படிகளையும் மூட்டை கட்டி விட்டு கணித உபகரணப்பெட்டிகள், அறிவியல் சோதனை கூடங்கள், கணிப்பொறிகள், புரஜக்டர்கள், போன்ற அனைத்தையும் தொடக்கப்பள்ளிகளுக்கு கட்டாயமாக கொடுக்கப்பட வேண்டும்.
அப்படி செய்தால் மட்டுமே கல்வித்தரம் மேம்படும்.




2 Comments:

  1. அரசாங்கம் காதுகொடுத்து கேட்குமா?

    ReplyDelete
  2. தனியார் பள்ளிகளில் ஏன் ABL பின்பற்ற அரசு செய்யவில்லை

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive