வெளிநாடுகளில் படிக்க விரும்பும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் சீர்மரபினர், நிலமில்லாத விவசாயத் தொழிலாளர்கள், பாரம்பரிய இனத்தைச்
சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குகிறது மத்திய சமூக
நீதி அமைச்சகம்.
வெளிநாடுகளில் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அதற்கேற்ற படிப்புத்
திறனும் திறமைகளும் இருக்கும். ஆனால், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில்
சேர்ந்து படிப்பதற்குத் தேவையான நிதி வசதி இருக்காது. வங்கிக் கடன்
வாங்கிப் படிக்கச் செல்லலாம். அதேசமயம், அதற்கு உத்தரவாதமாகக் காட்ட
அசையாச் சொத்து இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? வெளிநாட்டுப்
பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை
வழங்கி கை தூக்கி விடக் காத்திருக்கிறது மத்திய சமூக நீதி அமைச்சகம்.
தாழ்த்தப்பட்ட, சீர்மரபு நாடோடி பழங்குடியினர் (Denotified Normadic and
Semi-Normadic Tribes) மற்றும் நிலமில்லாத விவசாயத் தொழிலாளர்கள்,
பாரம்பரியக் கலைஞர்கள் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டுப்
பல்கலைக்கழகங்களில் முதுநிலைப் படிப்போ அல்லது பி.எச்டி. ஆய்வுப் படிப்போ
படிக்க விரும்பினால், அதற்கு கல்வி உதவித் தொகை வழங்குகிறது மத்திய அரசின்
சமூக நீதி அமைச்சகம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...