இந்திய
கிராமங்களை மேம்படுத்தும் பணியில் புதுமையான நீர் சேகரிப்பு முயற்சிகள்
மூலம் ஈடுபட்டதற்காக, பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் ராஜேந்திர சிங்கிற்கு
2015ஆம் ஆண்டுக்கான 'ஸ்டாக்ஹோம் நீர் விருது' வழங்கப்படுகிறது.
இதுகுறித்து, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் நீர் விருதுக் குழு
வெளியிட்ட அறிக்கையில், கிராமப்புற இந்தியாவின் நீர் பாதுகாப்பை
வலுவாக்கும் விதமாக, அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை
மேம்படுத்துவதற்காக ராஜேந்திர சிங் மேற்கொண்டு வரும் கடினமுயற்சிகளுக்காக
இவ்விருது வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளது.
ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜேந்திர சிங், 1959ஆம் ஆண்டு பிறந்தவர் ஆவார். வறட்சியை நீக்கி மக்களை முன்னேற்றும் பணியில் பல வருடங்களாக ஈடுபட்டு வருகிறார். அதனால், அவர் தண்ணீர் மனிதர் என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். வரும் ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி, ஸ்வீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோமில் நடைபெறவுள்ள உலக தண்ணீர் வார விழாவில், இந்த விருது ராஜேந்திர சிங்குக்கு வழங்கப்பட உள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...