முதல், இரண்டாம்
வகுப்பு ஆசிரியர்கள், ஆங்கில வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களுக்கு
ஆங்கிலம் உச்சரித்தல் பயிற்சி மார்ச் 16-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும்
நடத்தப்படுகிறது.
தொடக்கக்
கல்வித் துறை, அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில், இந்தப்
பயிற்சி அளிக்கப்படுகிறது. மார்ச் 16, 17-ஆம் தேதிகளில் முதல் கட்டமாகவும்,
மார்ச் 19, 20-ஆம் தேதிகளில் இரண்டாம் கட்டமாகவும் இந்தப் பயிற்சி
வழங்கப்படுகிறது.
வட்டார வள மைய அளவிலான இந்தப் பயிற்சியை ஏற்கெனவே பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் வழங்குவார்கள்.
இந்தப் பயிற்சிக்கான சி.டி.க்களை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களிடம் பெற்றுக்கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...