மத்திய அரசில் பணியாற்றும், 31 லட்சம் பணியாளர்களுக்கும், அவர்களின்
குடும்பத்தினருக்கும், இலவசமாக, யோகா பயிற்சி அளிக்கும் திட்டம், ஏப்ரல் 1
முதல், நாடு முழுவதும் துவங்க உள்ளது.
இதற்காக, நாடு முழுவதும் உள்ள மத்திய
அரசு அலுவலகங்களில் ஏற்பாடுகள் செய்யப்படும். இந்த பயிற்சி வகுப்புகளை, அந்தந்த பகுதியில் உள்ள யோகாசன மையங்கள் நடத்தும்.
இதற்கான ஏற்பாடுகளை, மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை
மேற்கொண்டுள்ளது. வார விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை மற்றும் பிற
விடுமுறை நாட்களில், இந்த பயிற்சி மையங்கள் செயல்படாது. மத்திய பணியாளர்
நலன் மற்றும் பயிற்சித்துறை அதிகாரிகளுக்கு என, இரண்டு நாள், மன அழுத்த
தவிர்ப்பு பயிற்சி முகாமும் நடைபெற உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...