மாநிலம் முழுவதும், பல தனியார் பள்ளிகள்,
வரும் கல்வியாண்டில், மாணவர்களை, 'வளைக்கும்' பணியில், ஆசிரியைகளை
ஈடுபடுத்தி உள்ளது. பள்ளியை சுற்றி உள்ள நகர, கிராமங்களில், வீடு, வீடாக
சென்று, 'நோட்டீஸ்' வழங்கி, பள்ளியின் அருமை, பெருமைகளை எடுத்துக்கூறி,
மாணவர்களை இழுக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளன. இதற்கு, ஆசிரியைகள், கடும்
எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
குறைந்த சம்பளம்:
மெட்ரிக்
பள்ளிகளில், ஆரம்ப நிலை வகுப்புகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு,
குறைந்தபட்சம், 3,000 ரூபாய் முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. பல
பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத அலுவலக பணியிடங்களுக்கு, அதற்கு உரியவர்களை
நியமிக்காமல், கிளர்க், மேலாளர் உள்ளிட்ட பணிகளையும் ஆசிரியர்களையே பார்க்க
சொல்கின்றனர். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட, பள்ளி நிர்வாகங்கள்
விடுவதில்லை.
'டோர் கேன்வாசிங்':
இந்நிலையில்,
2015 - 16ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பணி, தற்போது தீவிரமாக நடந்து
வருகிறது. மாணவர்களை வளைப்பதற்காக, பள்ளிகளில் உள்ள வசதிகளை பட்டியலிட்டு,
'நோட்டீஸ்' அச்சடித்து, பொதுமக்களிடம் வினியோகிக்கும் பணியும் துவங்கி
உள்ளது.தேர்வுப் பணியில் ஈடுபடாத ஆசிரியர், ஆசிரியைகளிடம், 'நோட்டீஸ்'களை
மொத்தமாக வழங்கி, வீடு வீடாக, 'டோர் கேன்வாசிங்' செய்து, பள்ளியின் அருமை,
பெருமைகளை எடுத்துக்கூறி, மாணவர்களை வளைக்க, பள்ளி நிர்வாகங்கள்
உத்தரவிட்டு உள்ளன.
தாங்கலையே...:
பள்ளி
நிர்வாகங்களின், 'இம்சை' தாங்க முடியாமல், ஆசிரியர்கள் குறிப்பாக,
ஆசிரியைகள், கடும் அவதிப்படுகின்றனர். கொளுத்தும் வெயிலில், பள்ளியை
சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்ல முடியாமல், அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து, ஆசிரியைகள் சிலர் கூறியதாவது: எங்களுக்கு கொடுப்பதே, 'கட்டை' சம்பளம் தான். பெரும்பாலானோர், 3,000, 3,500 ரூபாய்க்கு, வேலை பார்க்கிறோம். இதில், 'டோர் கேன்வாசிங்' பணியையும், கூடுதலாக ஒப்படைப்பது, எந்த வகையில் நியாயம்? கடந்த காலங்களில், 'டோர் கேன்வாசிங்' பணிக்கு, தனியாக வாலிபர்களை நியமிப்பர்.
இதுகுறித்து, ஆசிரியைகள் சிலர் கூறியதாவது: எங்களுக்கு கொடுப்பதே, 'கட்டை' சம்பளம் தான். பெரும்பாலானோர், 3,000, 3,500 ரூபாய்க்கு, வேலை பார்க்கிறோம். இதில், 'டோர் கேன்வாசிங்' பணியையும், கூடுதலாக ஒப்படைப்பது, எந்த வகையில் நியாயம்? கடந்த காலங்களில், 'டோர் கேன்வாசிங்' பணிக்கு, தனியாக வாலிபர்களை நியமிப்பர்.
என்ன கொடுமை சார்!
இப்போது,
அந்த வேலையையும், எங்கள் தலையில் கட்டிவிடுகின்றனர்; என்ன கொடுமை சார்!
மறுத்தால் வேலை போய்விடும் என்பதால், செய்து வருகிறோம். இவ்வாறு, அவர்கள்
தெரிவித்தனர்.
சங்க நிர்வாகி எதிர்ப்பு:
இந்த
விவகாரம் குறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'டோர் கேன்வாசிங்' பணிக்கு, ஆசிரியைகளை
உட்படுத்துவது சரியல்ல. சில பள்ளிகள், லாப நோக்கோடு செயல்படுகின்றன'
என்றார். ஆசிரியைகளின் அவதிக்கு, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம், கடிவாளம்
போடுமா?
Will not the cry of private school teachers who are being misused by management be heard by someone?
ReplyDelete