பள்ளிகளில் கம்ப்யூட்டர் பயிற்றுநர்கள் நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
திருநெல்வேலி உமா, உசிலம்பட்டி பாண்டியராஜன் உட்பட 152 பேர் தாக்கல் செய்த
மனு: அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் பயிற்றுநர்களாக 1999 ல் பணியில்
சேர்ந்தோம். 2008 ல் பணி வரன்முறை செய்யப்பட்டோம். 2013 ல் 652
கம்ப்யூட்டர் பயிற்றுநர்களை அரசு பணிநீக்கம் செய்தது. இது தொடர்பான
வழக்கில் எங்களில் பி.எட்.,முடித்தவர்களுக்கு பணி நியமனங்களில் முன்னுரிமை
வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் 652 பணியிடங்களை நேரடி நியமனம்
மூலம் ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்ப உள்ளது. எங்களுக்கு வாய்ப்பு
மறுக்கப்பட்டுள்ளது. பணி நியமனம் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம்
வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். முன்னுரிமை அடிப்படையில்
எங்களுக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர். நீதிபதி
கே.ரவிச்சந்திரபாபு பள்ளிக் கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியம்
4 வாரங்களில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும், ஏற்கனவே இதுபோல் தாக்கலான
வழக்குடன் சேர்த்து விசாரிக்கும் வகையில் பட்டியலிட வேண்டும் எனவும்
உத்தரவிட்டார். மனுதாரர்களின் வழக்கறிஞர் லஜபதிராய் ஆஜரானார்.
இப்படி வழக்கு மேல் வழக்கு போட்டு இங்கு பாதிக்க படுபவர்கள் மாணவர்கள் மட்டுமே என்பதை உணர்ந்து செயலபடவேண்டுன்
ReplyDeleteகம்ப்யூட்டர் பயிற்றுநர்கள் மட்டுமே நேரடி நியமனம் மற்ற அனைவருக்கும் சிறப்பு தேர்வு
ReplyDelete