காஞ்சிபுரம்:'ஒரிஜினல்' காஞ்சிபுரம் பட்டு சேலைகளை கண்டறிய முடியாமல்,
வெளியூரில் தயாரிக்கப்பட்டு, காஞ்சிபுரத்தில் விற்கப்படும் போலி பட்டு
சேலைகளை வாங்கி, பெரும்பாலானோர் ஏமாந்து வருவதாக, பட்டு சேலைகள் கூட்டுறவு
சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர். பட்டு சேலை என்றாலே, காஞ்சிபுரம் தான்
என்ற அளவிற்கு பெருமை உள்ளது.
நுாற்றுக்கணக்கானோர்அனைத்து வகை நிகழ்ச்சி களுக்கும், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து, பட்டு சேலை வாங்க, தினமும் நுாற்றுக்கணக்கானோர், காஞ்சிபுரம் வந்து செல்கின்றனர்.காஞ்சிபுரத்தில், போலியான ஜரிகையை இணைத்து, பட்டு சேலைகள் என விற்று, சில ஆண்டுகளுக்கு முன் மோசடி நடைபெற்றது.
இதையடுத்து, இதுபோன்ற மோசடிகளை கண்டறிய, ஜரிகையின் தரத்தை கண்டறியும்
வகையில், அரசு சார்பில் இயந்திரம் நிறுவப்பட்டது.இந்த மோசடி ஒரு புறம்
இருக்க, வெளியூர்களில் தயாரிக்கப்படும் பட்டு சேலைகள், காஞ்சிபுரம் சேலைகள்
என்ற பெயரில், இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.
காஞ்சிபுரம் பட்டு :சேலைகளின் பெருமை அறியாமல், காஞ்சிபுரத்தில்
விற்கப்படும், வெளியூர் பட்டு சேலைகளை வாங்கிச் செல்கின்றனர்.இதுகுறித்து,
பட்டு சேலை கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கூறும் தகவல்கள் அதிர்ச்சி
அளிப்பதாக உள்ளன.அவர்கள் கூறியதாவது:
உண்மையில், காஞ்சிபுரத்தில் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகளை, 5,000
ரூபாய்க்கு குறைவாக விற்பனை செய்யவே முடியாது.அப்படி இருக்கும்போது, 1,500
ரூபாய் முதல் 4,000 ரூபாய்க்கு காஞ்சிபுரம் பட்டு சேலைகள் உள்ளதாக, சிலர்
விற்பனை செய்து, வாடிக்கையாளர்களை ஏமாற்றி வருகின்றனர்.
சிரமம்:முந்தைய மோசடிகளை மிஞ்சும் அளவிற்கு, கும்பகோணம், தஞ்சாவூர், சேலம்,
தர்மாவரம் போன்ற பகுதிகளில் நெசவு செய்யப்படும் சேலைகள், காஞ்சிபுரத்தில்
விற்கப்படுகின்றன. இந்த பட்டு சேலைகள், ஒரே தோற்றமுடையதாக நெசவு
செய்யப்படுகின்றன. இதனால், போலிகளை கண்டறிவதில், வெளியூர்வாசிகளுக்கு
சிரமம் ஏற்படுகிறது.
காஞ்சிபுரத்தில் விற்கப்படும் பட்டு சேலைகள் எல்லாம், காஞ்சி சேலைகள் தானா என்பதை
உறுதிப்படுத்தியபின் வாங்க வேண்டும்.உண்மையான காஞ்சிபுரம் பட்டு
சேலைகளுக்கும், வெளியூர் பட்டு சேலைகளுக்கும் குறைந்த அளவே வித்தியாசங்கள்
உள்ளன.நுகர்வோரிடம் விழிப்புணர்வு இல்லாததால், இதை பயன்படுத்தி, சில
தனியார் கடைகள், தினமும் பல லட்சம் ரூபாய் அளவுக்கு வருமானத்தை
ஈட்டுகின்றன.நியாயமாக நெசவு செய்யும் நெசவாளர்கள், தவித்து
வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...