Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பல துறை வாய்ப்புகளை கொண்ட ஆங்கில இலக்கியம்

           பல துறைகளில் பணி வாய்ப்புகளை சாத்தியமாக்கும் படிப்புகள், தனக்கான பொழிவை என்றுமே இழப்பதில்லை. அவற்றில் ஒன்றுதான் ஆங்கில இலக்கியம்.
படிப்புகள் மற்றும் வாய்ப்புகள்

ஆங்கிலம் மற்றும் ஆங்கில இலக்கியத்தில் ஆர்வமுள்ள, பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு, உயர்கல்வியில் சில படிப்புகள் காத்திருக்கின்றன. நாட்டின் பல்வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆங்கில இலக்கியம் (English Literature) இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன.

அதிகரித்துவரும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இன்று, அதிக அளவிலான ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். ஆங்கில இலக்கியத்தில் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்வதன் மூலம் ஆசிரியப் பணி வாய்ப்பை எளிதாக்கலாம்.

ஆங்கில இலக்கியம் படிப்பதால், நீங்கள் வெறுமனே ஆசிரியப் பணிகளை மட்டும் பெறப்போவதில்லை. மாறாக, ஐ.டி., கம்பெனிகளில் பயிற்சியாளர்களாகவும், பல்வேறு துறைகளில் மொழிபெயர்ப்பாளர்களாகவும், பெரிய நிறுவனங்களில் வரவேற்பாளர்களாகவும், மீடியா துறைசார்ந்த நபர்களாகவும், உற்சாகமூட்டக்கூடிய பேச்சாளர்களாகவும், பணி வாய்ப்புகளைப் பெற முடியும்.

கைவசமாகும் வெற்றி

ஒவ்வொரு துறையிலும், ஆங்கிலம் எனும் சர்வதேச மொழியின் தாக்கம் மிக அதிகம். பொறியியல் மற்றும் இதர நிபுணத்துவ படிப்புகளை முடித்தப் பலரும், போதுமான ஆங்கில அறிவின்மையால், சரியான பணி வாய்ப்புகளைப் பெற முடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே, ஆங்கில மொழியானது, வாழ்வின் வெற்றிக்கு அடித்தளமாக திகழ்கிறது.

எந்த துறையிலும், வெற்றி சாதாரணமாக வாய்ப்பதில்லை. கடினமான அர்ப்பணிப்பு மற்றும் திட்டமிட்ட முறையில் பணியாற்றினால் மட்டுமே வெற்றி சாத்தியம். போதிய ஆங்கிலத்திறன் இருந்தால், வாழ்வில் கட்டாயம் வெற்றியை சந்திப்பீர்கள்!




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive