தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமனத் தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தது.
ஆசிரியர் தகுதித்தேர்வில் பங்கேற்ற லாவண்யா உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர். தமிழக அரசு வெளியிட்ட அரசாணைகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் அனைத்து பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு அளிக்கப்படுவதுடன், வெயிட்டேஜ் முறையும் பணி நியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பெண் விலக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என விதிகள் இருக்கும்போது அனைவருக்கும் வழங்குவது சரியில்லை என்றும் வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படுவதால் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாக படிப்பை முடித்தவர்களுக்கு பாதிப்பு இருக்கும்.
ஒரு வாரம் ஒத்திவைப்பு
இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின் முடிவு சரி என்றும், ஐகோர்ட்டு மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் அரசின் முடிவு தேர்வு எழுதுபவர்களுக்கு பாதகமானது என்றும் கூறப்பட்டது. ஒரே வழக்கில் இதுபோன்ற கருத்து வேறுபாடு அச்சத்தைத் தருவதாக இருக்கிறது. எனவே, சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு இந்த வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா மற்றும் நீதிபதி சிவகீர்த்திசிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல் ஹரிஷ் குமார் ஆஜரானார். தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரசு வக்கீல் யோகேஷ்கன்னா, இந்த மனுவின் மீதான பதிலை தாக்கல் செய்ய ஒருவார கால அவகாசம் கோரினார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பதில் மனுவை ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்யுமாறும் வழக்கை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டனர்.
Good night !!!
ReplyDelete