வேலூர், : வேலை வாய்ப்பு அலுவலகங்களின் செயல்பாடுகள் அனைத்தும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஷ்ஷ்ஷ்.tஸீஸ்மீறீணீவீஸ்ணீணீவீஜீஜீu.ரீஷீஸ்.வீஸீ
என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் வேலை
வாய்ப்பற்ற இளைஞர்கள் தங்கள் கல்வித்தகுதியை புதிதாக பதிவு செய்தல்,
கூடுதல் கல்வியை பதிவு செய்தல், பதிவேட்டின் நகலை, பதிவிறக்கத்தை வீட்டில்
இருந்தோ கடைகளில் இருந்தபடியோ பதிவு செய்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவர்கள் தங்களது பதிவு
விவரங்களை இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு அடையாள அட்டை பதிவிறக்கம்
செய்து சரிபார்த்துக்கொள்ளலாம். பதிவு விவரங்களில் விடுபாடுகள் அல்லது
முரண்பாடுகள் ஏதேனும் இருந்தால் அனைத்து கல்வி சாதிச் சான்று, ரேஷன்
கார்டு, ஆதார் எண், இதர சான்றுகள், இணையதள மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றுடன்
ஒரு மாதத்திற்குள் தாங்கள் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில்
தொடர்புகொண்டு சரிசெய்து கொள்ளலாம். என்று கலெக்டர் நந்தகோபால்
தெரிவித்துள்ளார்.
please rearrange this message. because the vellore EMPLOYMENT web site address is not showing properly ....
ReplyDelete