மதுரை மனநல திட்டத்தின் மூலம் கவுன்சிலிங் பெற வருபவர்களில், மொபைல் போன் கலாசாரத்தில் இருந்து மீளமுடியாமல் தவிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் அதிகம்.
இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசங்கரி கூறியதாவது: மதிப்பெண் குறைகிறது என்ற காரணத்தால்தான் பிள்ளைகளை கவுன்சிலிங் செய்ய பெற்றோர் அழைத்து வருகின்றனர். மாணவர்களிடம் பேசும் போதுதான் இப்பிரச்னை தெரியவந்தது. ஒரு வகையினர் எந்நேரமும் போன் மூலம் சாட்டிங் செய்கின்றனர். இன்னொரு வகையினர் சதா பேசிக் கொண்டே இருக்கின்றனர்.
இருவகையினரும், பெற்றோர் மற்றும் சமுதாயத்திடம் இருந்து விலகி தனிமையில் இருப்பது தான் பிரச்னைக்குரியது. படிப்பிலும் கவனம் செலுத்துவதில்லை. இதிலிருந்து மீட்பது சவாலான விஷயம். வாரம் ஒருமுறை பெற்றோருடன் மாணவரை அழைத்து வந்து தொடர்ந்து கவுன்சிலிங் செய்கிறோம். இதுவரை 10 மாணவர்களை மீட்டுள்ளோம். 20 மாணவர்கள் கவுன்சிலிங்கில் உள்ளனர், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...