Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தனியார் பள்ளி கண்காணிப்பாளர்கள் கூண்டோடு மாற்றம் செய்து அதிரடி!!

       ஓசூரில், ப்ளஸ் 2 வினாத்தாளை, "வாட்ஸ்- அப்' மூலம் அனுப்பிய விவகாரத்தை தொடர்ந்து, தனியார் பள்ளி தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

                ஓசூர்-தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளியில், கடந்த, 18ம் தேதி நடந்த ப்ளஸ் 2 கணிதத்தேர்வின் போது, தேர்வு மைய கண்காணிப்பாளராக இருந்த, ஓசூர் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன் ஆகியோர், கணித வினாத்தாளை, மொபைல் போன் மூலம் புகைப்படம் எடுத்து, அதனை தனது சக ஆசிரியர்களான உதயகுமார், கார்த்திகேயன் ஆகியோருக்கு, "வாட்ஸ்-அப்' மூலம் அனுப்பினர்.இது தொடர்பாக, நான்கு ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் பணியாற்றி வந்த தனியார் பள்ளியில், தேர்வு மைய கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த, 68 ஆசிரியர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர்.அவர்களுக்கு பதிலாக, நாளை நடக்கும், ப்ளஸ் 2 தேர்வுக்கு, ஓசூரில் உள்ள தனியார் பள்ளியில் உள்ள, 44 தேர்வு அறைகளுக்கு, தலா இருவர் வீதம், 88 ஆசிரியர்களும், கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளியில் உள்ள, 25 தேர்வு அறைகளுக்கு, தலா இருவர் வீதம், 50 ஆசிரியர்களும், அறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், ஆசிரியர் பயிற்றுனர்களும், தேர்வு மைய கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், நாளை நடக்கும் தேர்வு முடிந்த பின்னர், மீண்டும் மாற்றப்படுவார்கள் என, சி.இ.ஓ., ராமசாமி தெரிவித்தார்.தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம், ஆசிரியர்கள் மத்தியில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




1 Comments:

  1. Govt must take severe action against them.govt getback their qualification .govt must cancell the school's license and exan centre.they are inhuman.i think this incident might not happen without knowledge of correspondent or secretary.so arrest them and seize their properties.in future should cancell private centres.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive