பெருங்குடி, பள்ளிக்கூட சாலையில், புனித தோமையார் மலை ஒன்றியத்திற்கு உட்பட்ட, அரசு தொடக்கப் பள்ளி, 1938ம் ஆண்டு துவக்கப்பட்டது.
முதலில், ஐந்து
குழந்தைகளுடன் துவக்கப்பட்ட அந்த பள்ளி, 2011ம் ஆண்டில், உயர்நிலைப்
பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. போதிய கட்டட வசதியில்லாததால், ஏரிக்கரை
தெருவில் புதிய பள்ளி வளாகத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது, பள்ளிக்கூட
சாலையில், தொடக்கப் பள்ளி மட்டுமே செயல்படுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல்
5ம் வகுப்பு வரை உள்ள அந்த பள்ளியில், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்
படிக்கின்றனர்.
பள்ளியில்
மூன்று கட்டடங்களில், மொத்தம், 11 வகுப்பறைகள் உள்ளன. அவற்றில், இரண்டு
கட்டடங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பும், ஒரு கட்டடம் 20 ஆண்டுகளுக்கு
முன்பும் கட்டப்பட்டன. முறையான பராமரிப்பின்மையால், அந்த கட்டடங்கள் மோசமான
நிலையில் உள்ளன.
இதுகுறித்து,
கடந்த சில ஆண்டுகளாகவே, பள்ளி நிர்வாகம், கல்வி துறை அதகாரிகளுக்கு
தெரிவித்தது. ஆனால், உயரதிகாரிகள் அதை கண்டுகொள்ளவில்லை. பள்ளி உள்ள பகுதி,
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் வந்தாலும், அந்த பகுதிக்கான, வருவாய்
துறை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளதால், புனிததோமையார் மலை ஒன்றியத்தில்
பள்ளியின் கட்டுப்பாடு உள்ளது. பராமரிப்பு பணிகளை மட்டும், மாநகராட்சி
மேற்கொண்டு வருகிறது.
நடந்தது என்ன?
இந்த நிலையில்,
நேற்று முன்தினம் அதிகாலையில், ஒரு கட்டடத்தின் வகுப்பறையின் மேற்கூரை
பூச்சு, ஆறு அடி சுற்றளவிற்கு திடீரென பெயர்ந்து விழுந்தது. அதில்,
கூரையில் இருந்த மின்விசிறியும் விழுந்தது. தரையில் இருந்த மேஜை
நொறுங்கியது. அதிகாலையில் இந்த விபத்து நடந்ததால், பிஞ்சு குழந்தைகள் உயிர்
தப்பின.
இதுகுறித்து
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சி எல்லைக்குள் பள்ளி
இருந்தாலும், அதன் கட்டுப்பாடு, புனித தோமையார் மலை ஒன்றியத்திற்கு
உட்பட்டுள்ளது. நாங்கள் பராமரிப்பு பணிகளை மட்டுமே மேற்கொள்ள முடியும்.
மாநகராட்சியிடம், அந்த பள்ளி முழுமையாக ஒப்படைக்கப்பட்டால், உடனடியாக
அவற்றை இடித்து, புதிய கட்டடங்கள் கட்ட தயாராக இருக்கிறோம். இவ்வாறு
அவர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...