துபாய் நாட்டிலுள்ள ஆண்கள் தொழில்நுட்பக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் ஒரு லிட்டர் பெட்ரோலில் ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை ஓடக்கூடிய அதிநவீன காரை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் வெற்றி கண்டுள்ளனர்.
‘ஈக்கோ
துபாய் ஒன்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த காரின் மொத்த எடை வெறும் 25 கிலோ
மட்டுமே. இரண்டு மீட்டர் நீளம், அரை மீட்டர் அகலம், அரை மீட்டர் உயரத்தில்
இந்த நவீன காரை வடிவமைத்த நோக்கம் என்ன? என்பது தொடர்பாக
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்த திட்டத்தின் முக்கியப்புள்ளியான
அஹ்மத் கமிஸ் அல் சுவைதி என்ற மாணவர் கூறுகையில், பெட்ரோல் நீண்ட
நாட்களுக்கு நிலைத்து கிடைக்கப் போவதில்லை. எனவே, சுற்றுச்சூழலுக்கு மாசு
விளைவிக்காத நவீன போக்குவரத்துக்கு இத்தகைய கண்டுபிடிப்புகள் மிகவும்
அவசியமானது என்று குறிப்பிடுகிறார்.
கோலாலம்பூரில்
வரும் ஜுலை மாதம் நடைபெறும் அரியவகை கண்டுபிடிப்புகளுக்கான கண்காட்சியில்
இந்த நவீன ‘ஈக்கோ துபாய் ஒன்’ காரின் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.
கட்டாயம் வரவேற்பு பெரும் .அஹ்மத் கமிஸ் அல் சுவைதி அவர்களுக்கு பாராட்டுகள்.
ReplyDeleteThallittu pona vena 1000 km pogalam
ReplyDelete