டெல்லி: உலக அளவில் பிரபலமான
குறுஞ்செய்தி சேவை அப்ளிகேஷனான "வாட்ஸ் அப்" நிறுவனம் ஒரு வழியாக வாய்ஸ்
காலிங் சேவையையும் தொடங்கி விட்டது. வாட்ஸ் அப்பின் வாய்ஸ் காலிங் குறித்த
போலிச் செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அதிகாரப்பூர்வமாக தன்னுடைய
வாய்ஸ் காலிங் சேவையினை வெளியிட்டுள்ளது பேஸ்புக்குடன் இணைந்த வாட்ஸ் அப்
நிறுவனம்.
ஆனால், இந்த சேவையினை உங்களது மொபைலில்
ஆக்டிவேட் செய்ய மற்றொரு பயனாளரின் உதவி தேவை. முதலில், வாட்ஸப்பின் புதிய
பதிவினை தரவிறக்கம் செய்த பின்னர், வாய்ஸ் காலினை தரவிறக்கம் செய்த மற்றொரு
நண்பர் மூலமாக உங்களுக்கு கால் செய்யச் சொன்னால் முடிந்தது வேலை. கால்
முடிந்தவுடன் மீண்டும் ஒரு முறை வாட்ஸ் அப்பினை ஓப்பன் செய்தால் தற்போது
ஒரு புதிய திரையினைப் பார்க்கலாம். அதில் வாய்ஸ் காலிங்கிற்கும் ஒரு புதிய
இடம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.ஆனால், வாட்ஸ் அப் அப்கிரேடு
செய்யாத பயனாளர்களை உங்களால் தொடர்பு கொள்ள இயலாது. அப்புறம் என்ன வாய்ஸ்
மெசேஜ் அனுப்பி நண்பர்களை டார்ச்சர் செய்ததை நிறுத்தி இனி வாட்ஸ் அப் மூலமா
கால் செய்யுங்க... "சுவீட்" டார்ச்சர் பண்ணுங்க!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...