வாட்ஸ் அப்பில் கேள்வித்தாள் வெளியான
விவகாரத்தில் தொடர்புடைய பள்ளிகளின் தேர்வு மையங்களை, வரும் கல்வியாண்டு
முதல் ரத்து செய்ய கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி
மாவட் டம் ஓசூரில் பிளஸ் 2 தேர்வில் வாட்ஸ் அப்பில் கேள்வித்தாள் வெளியிட்ட
சம்பவத்தில் ஓசூர் ஸ்ரீவிஜய் வித்யாலயா பள்ளியை சேர்ந்த மகேந்திரன்,
கோவிந்தன், உதயகுமார், கார்த்திகேயன், சஞ்சீவ்குமார், விமல்ராஜ்,
மைக்கேல்ராஜ், கவிதா என 8 ஆசிரியர்களை போலீசார் கைது செய்து சிறையில்
அடைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 8
பேரிடமும் போலீசார் விசாரணை முடிந்த நிலையில், எந்த அடிப்படையில் ஓசூர்
கல்வி மாவட்ட அலுவலர் வேதகண் தன்ராஜ், உடற்கல்வி ஆசிரியர் மாது உள்ளிட்ட 5
பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்ற விவரத்தை பெற கல்வித்துறைக்கு போலீசார்
கடிதம் எழுதியுள்ளனர்.
அதற்கான பதில், கல்வித்துறையிடம் இருந்து
வந்தவுடன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கல்வி மாவட்ட அலுவலர் உள்ளிட்ட 5
பேருக்கும் காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்க
உள்ளனர். இதனிடையே முறைகேடு நடந்த பரிமளம் பள்ளியில், முதன்மை
கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் கெலமங்கலம் அரசு மாதிரி
மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் நாராயணன் மீதும் துறை ரீதியான
நடவடிக்கை பாயும் என தெரிகிறது.
தற்போது பிளஸ்-2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்
தேர்வுகள் நடைபெற்று வருவதால், முறைகேட்டில் சம்மந்தப்பட்ட விஜய் வித்யாலயா
பள்ளிகளில் செயல்பட்டு வரும் தேர்வு மையங்களை உடனடியாக ரத்து செய்ய
முடியாத நிலை உள்ள தால், வரும் கல்வியாண் டில் இருந்து இந்த கல்வி
குழுமங்களின் அனைத்து தேர்வு மையங் களையும் நிரந்தரமாக ரத்து செய்ய, பள்ளி
கல்வித்துறைக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள்
தெரிவித்தனர். இந்த முறைகேடு விவகாரத்தில் வருகிற ஏப்ரல் 1ம் தேதி, மேலும்
சிலரை விசாரணைக்கு காவல்துறையினர் உட்படுத்த உள்ளதால், மேலும் பல
திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...