Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குழந்தைகள் நலக்குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிட நியமனம்

   குழந்தைகள் நலக்குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக, தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
        கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: வரும் 2006ம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) திருத்தப்பட்ட சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதிக் குழுமத்திற்கான சமூகப்பணி உறுப்பினர் மற்றும் குழந்தைகள் நலக்குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக தகுதி வாய்ந்த சமூக பணியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
       குழந்தைகள் தொடர்பான உடல்நலம், கல்வி அல்லது நலப் பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் தீவிர ஈடுபாடு கொண்டவர்களாக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். தற்போது குழந்தைகள் நலக்குழுக்களில் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக உள்ளவர்களும் மற்றும் இளைஞர் நீதிக்குழுமத்தில் சமூகப் பணி உறுப்பினராக உள்ளவர்களும் இரண்டாவது பணிக் காலத்திற்காக விண்ணப்பிக்க தகுதி உடையவர்களாவர். எனினும் ஒரு குழு அதிகபட்சமாக இருமுறை மட்டும் வகிக்க தகுதி உடையவர்கள்.
குழந்தைகள் நலக்குழுக்களில் தலைவர் மற்றும் உறுப்பினர் மற்றும் இளைஞர் நீதிக் குழுமத்தில் சமூகப்பணி உறுப்பினராக நியமிக்கப்படுபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.
பெண்கள் சம்பந்தப்பட்ட பட்டம், ஊரக வளர்ச்சி, சட்டம் அல்லது மருத்துவம் ஆகிய பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்கான விண்ணப்பப் படிவத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் படிவத்தில் ஆணையர், சமூக பாதுகாப்புத் துறை, எண் 300. புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை 10 என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive