பதவி உயர்வு, தேர்வு நிலை தர ஊதிய உயர்வு உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்கல்வி ஆசிரியர்கள், கோட்டை நோக்கிப் பேரணி
சென்றனர்.
நிதித்துறை செயலர் உதயசந்திரனிடம் மனு அளித்தனர்.தமிழ்நாடு
மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் சார்பில், தொழிற்கல்வி
ஆசிரியர்கள், சென்னையில் நேற்று, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில்
இருந்து கோட்டை நோக்கி பேரணி சென்றனர்.
கழக பொதுச் செயலர் ஜனார்த்தனன் கூறும்போது, ''தொழிற்கல்விக்கே அனைத்து
இடங்களிலும் அதிக வரவேற்பு உள்ளதால், அரசு பள்ளிகளில் தொழிற்கல்வியை
கட்டாயமாக்கி, உரிய முன்னுரிமை தர வேண்டும். தொழிற்கல்வி ஆசிரியர்
காலியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து, போராட்டம்
நடத்தினோம்,'' என்றார்.
ஆசிரியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு, தொழிற்கல்வி ஆசிரியர்களின் போராட்டம் குறித்து, நிதித்துறைச் செயலர்
உதயசந்திரனிடம் போலீசாரால் தெரிவிக்கப்பட்டது. அப்போது, ஆசிரியர் கழக
பிரதிநிதிகளை சந்தித்த அவர், 'போராட்டம் வேண்டுமா; போராடித் தான் மனு
அளிக்க வேண்டுமா?' என கேட்டுள்ளார்.
அதற்கு ஆசிரியர்கள், 'நாங்கள் மனு அளிக்க பலமுறை இங்கு வந்துள்ளோம், பலமுறை
மனுக்களும் அளித்துள்ளோம். அனைத்தும் கிடப்புக்குப் போய்விட்டன. அதனால்
தான், போராட்டம் நடத்தினோம்' என, பதிலளித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...