நேற்று(27.03.15) நடைபெற்ற இயற்பியல்
தேர்வில் பத்து, ஐந்து மற்றும் மூன்று மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தன;
அனைத்து மாணவர்களும் மகிழ்ச்சியுடன்இருந்த அதே தருணத்தில், ஒரு-மதிப்பெண் வினாக்களில்ஐந்து/ஆறு
வினாக்கள் சிக்கலாகவும் தெளிவற்ற சொல்லாடல்களாகவும் இருந்ததால் மாணவர்கள்
குழம்பினர். பலர் நெடுநேரம் சிந்தித்தும் என்ன கேட்கப்பட்டுள்ளது என்றே
தெரியவில்லை என்று கூறும் நிலை.
காட்டாக, B-வரிசை
வினாத்தாளில் கே. எண். 14 :“ 4000 Åஅலைநீளமுள்ள... ” என்று தொடங்கும்வினாவில் அலை உருவாக்கும்
கட்ட வேறுபாடு கேட்கப்பட்டிருந்தது. க. வே.– வாய்ப்பாட்டைப் பயன்படுத்தி போட்டால் வரும்
விடை கொடுக்கப்படவில்லை – அதையொட்டி வரும் சுழி என்ற விடையைத்
தேர்வு செய்தனர் பலர். ஆனால் சிக்கல் அதுவல்ல: (அ) அலைஒரு ஊடகத்திலிருந்து எதிரொளித்து
வரும்போது அடையும் க. வே., (ஆ) இரு அலைகளுக்கு இடையேயான க. வே.அல்லது(இ)
ஒரே அலையில் இரு புள்ளிகளுக்கு இடையேயான க. வே.ஆகிய கருத்துருக்கள் தாம் உள்ளன. புதிதாக,
அலையொன்று, க. வேறுபாட்டைஉருவாக்கம் செய்ய ஆரம்பித்தது
என்றிலிருந்து, என்ற குழப்பம் தான்.
அடுத்து ஒன்று: கே. எண். 26: “ ஒரு சதுரத்தின் நான்குமூலைகலான...” என்று தொடங்கும் வினா ஒரு சிறப்பான வினா.
மாணவரின் இயற்பியல் அறிவை சோதிக்கும் வண்ணம் உள்ளது. ஆனால் மாணவர் பலர் இதே
தொனியில் நூலில் உள்ள கேள்வி என்று எண்ணித் தவறான விடையை அளித்தனர்.
இது போன்ற கேள்விகள் முழு-மதிப்பெண்பெரும் மாணவரின் எண்ணிக்கையைக் குறைக்கும்.
ஐ.ஐ.டி. போன்ற போட்டித் தேர்வுகள் நம் தமிழக மாணவர்களுக்குஎட்டாக் கனியாக உள்ள
நிலையில், கடந்தஇரு ஆண்டுகளாக அரசுத்தேர்வுகளில் வாங்கும் மதிப்பெண்ணில் 40 சதம்ஐ.ஐ.டி. போட்டித் தேர்வு
மதிப்பெண்ணுடன் சேர்க்கப்படுகிறது. இத்தகைய
கேள்விகளால் நம் மாணவர்களின் ஐ.ஐ.டி./என்.ஐ.டி. கனவு பாதிக்கப்படலாம். வினாத்தாளை
உருவாக்கும்வல்லுனர்கள்,இவற்றைக் கருத்தில் கொண்டு, இனி வரும் காலங்களில்தெளிவான, குழப்பாத,அதே
தருணம்அறிவை சோதிக்கும் வண்ணம் உருவாக்குவார்களாஎன்பதே நம்
ஆதங்கம்.
Article By-
ரவிசங்கர் - இயற்பியல் ஆசிரியர்
ரவிசங்கர் - இயற்பியல் ஆசிரியர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...