ராஜஸ்தானில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வின்
மகன், மாநில அரசு அலுவலகத்தில், 'பியூன்' வேலைக்காக விண்ணப்பித்த செயல்,
பொதுமக்கள் மத்தியில் மட்டுமின்றி, அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாக
பேசப்படுகிறது.
ராஜஸ்தானில், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின், டோங்க் சட்டசபை தொகுதி, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., ஹீரா லால் வர்மா. இவரது மகன் ஹன்ஸ்ராஜ். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர், மாநில வேளாண் வாணிபத்துறை அலுவலகத்தில், பியூன் வேலைக்காக விண்ணப்பித்துள்ளார்.

வியப்பு:
கவுன்சிலர்கள்
முதல், எம்.பி.,க்கள் வரை, பெரும்பாலான அரசியல்வாதிகள், தங்கள் வாரிசுகளை
எப்படியாவது அரசியலில் நுழைக்க, பிரம்ம பிரயத்தனம் செய்து வரும் நிலையில்,
கல்வித் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தான் தன் மகன் பணி புரிய
வேண்டும் என்ற ஹீரா லாலின் எண்ணம், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து, எம்.எல்.ஏ., ஹீரா லால் கூறியதாவது: நான், மூன்று பாடப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் பெற்றுள்ளேன்; அதில் ஒரு பாடப்பிரிவில், பல்கலை அளவில் சாதித்து தங்கப் பதக்கம் பெற்றுள்ளேன். கல்வியின் மகத்துவம் என்ன என்பது எனக்குத் தெரியும். தவிர, சமூக நலத்துறை துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளேன். அரசுப் பணியின் முக்கியத்துவம் குறித்து, நான் நன்கு அறிவேன். என் மகன், ஹன்ஸ்ராஜ் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளான். அவனுக்கு படிப்பு ஏறவில்லை. அவன் தற்போது தனியார் துறையில், மாதம், 5,000 ரூபாய் சம்பளத்தில் பணி புரிகிறான்.

உகந்தது:
அவனின்
திறமையும், தகுதியும் என்ன என்பதை நான் அறிவேன். அனைவரும் அவரவர் தகுதி,
திறமைக்கு ஏற்ப பணியாற்ற வேண்டும். அவன் விண்ணப்பித்திருக்கும் பியூன் வேலை
அவனுக்கு உகந்தது என, நினைக்கிறேன். முழு தகுதி அடிப்படையில் மட்டுமே,
இந்த பணி நியமனம் செய்யப்படும். நேர்முகத் தேர்வில் நன்றாக
செயல்பட்டுள்ளதாக கூறினான். அவனின் திறமைக்கு இந்த பணி கிடைக்கும் என,
நினைக்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார். ஹீரா லாலின் மூத்த மகன் வியாபாரம்
செய்கிறார். சமீபத்தில் பட்டப்படிப்பு முடித்த மற்றொரு மகன், சிவில்
சர்வீஸ் தேர்வுகளுக்காக தயாராகி வருகிறார். ஆசிரியராக விரும்பும் அவரின்
மகள், தற்போது பி.எட்., படித்து வருகிறார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...