குடும்ப அட்டை
தொலைந்துபோனவர்கள், நகல் அட்டை கோரி விண்ணப்பிக்கும்போது காவல் துறையில்
புகார் அளித்ததற்கான ரசீது இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொதுவிநியோகத்
திட்டத்தில் உணவுப் பொருள்கள் வாங்குவதற்கு மட்டுமின்றி அரசு சார்ந்த
சேவைகளைப் பெறுவது, வங்கிக் கணக்கு தொடங்குவது உள்ளிட்டபல்வேறு
தேவைகளுக்கும் குடும்ப அட்டை முக்கியமான அடையாள ஆவணமாகப்
பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, அனைத்து குடும்பத்துக்கும் குடும்ப அட்டைமிகவும் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது.
இதன் காரணமாக குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு அலுவலகங்களுக்கு புதிய குடும்ப அட்டை கோரி வரும் விண்ணப்பங்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே
வருகிறது. இதுஒருபுறம் இருக்க குடும்ப அட்டைகளைத் தவறாகப்
பயன்படுத்துவதைக் கண்டறிந்து அவற்றை தகுதி நீக்கம் செய்வது பெரும் சவாலாகஇருந்து வருகிறது.
ஒரே
குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட அட்டைகளைப்
பயன்படுத்துவது போன்றவற்றின் காரணமாக, மானிய விலையில் பொதுமக்களுக்குவழங்கப்படும் பொருள்கள் கள்ளச் சந்தைக்கு விற்பனைக்குச் செல்லும் நிலை உள்ளது.
இதுபோன்ற
நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப
அட்டைகள் தீவிர விசாரணைக்குப் பிறகே வழங்கப்படுகின்றன. அதிலும்
தற்போது நகல் குடும்ப அட்டை கோருவோர், தங்களது குடும்ப அட்டை தொலைபோனது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து அதன் ரசீதுபெற்றிருக்க வேண்டும் என்பதை வழங்கல் துறை கட்டாயமாக்கியுள்ளது. அந்த ரசீது நகலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...