ஆராய்ச்சி மாணவர்களை அலைக்கழித்த வங்கிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தலைமை ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மாற்றுத்திறனாளி
ஆராய்ச்சி மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில்
ஆராய்ச்சி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை குறிப்பிட்ட
வங்கிகள் மூலம் மாணவர்களுக்கு நேரடியாக வழங்கப்படும்.
இதுபோல் சென்னைப் பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு திருவல்லிக்கேணி கனரா வங்கியில் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில்
சில மாதங்களுக்கு முன்பு ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெறச் சென்ற மாற்றுத்
திறனாளிகள் அலைக்கழிக்கப்பட்டதோடு, உதவித் தொகையும் வங்கி சார்பில்
வழங்கப்படவில்லை.
இதைக் கண்டித்து 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வங்கி தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது,
ஆராய்ச்சி உதவித் தொகைகள் உள்ளிட்ட பிற உதவித் தொகைகளை விடுவிக்க வங்கிகள்
தயக்கம் காட்டக் கூடாது, வங்கிகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதாகச்
சென்றுவரும் வகையில் சாய்வு தளங்கள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட
பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக, புதுதில்லியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தலைமை ஆணையத்திலும் அவர்கள் முறையிட்டனர்.
இதை விசாரித்த
ஆணையம், யுஜிசி இணைச் செயலர், பெங்களூரில் உள்ள கனரா வங்கி தலைவர், நிர்வாக
இயக்குநர், சென்னை திருவல்லிக்கேணி கனரா வங்கிக் கிளை மேலாளர் ஆகியோருக்கு
விளக்கம் கேட்டு இரு தினங்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பியதோடு, 30
நாள்களுக்குள் பதிலளிக்குமாறும் கூறியுள்ளது.
அதில்,
வங்கியில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் சாய்வு தளம்,
சக்கர நாற்காலியுடன் செல்லக் கூடிய வகையிலான கழிவறைகள், மின் தூக்கிகளில்
பார்வையற்றவர்களுக்கான சிறப்பு வசதிகள் ஏற்படுத்தியிருக்க வேண்டிய
அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...