மகாராஷ்டிர மாநிலத்தில், பா.ஜ., கட்சியின் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான
ஆட்சி நடக்கிறது. கிழக்கு மும்பை பகுதியில் உள்ள, பள்ளி மாணவர்களிடையே
தார்மீக பலத்தை அதிகரிப்பதற்கு, பள்ளிகளில் பகவத் கீதையை கற்பிக்க முடிவு
செய்யப்பட்டது. இந்த முடிவை எதிர்த்து, டில்லி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல
மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவுக்கு மும்பை நகராட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்
மனுவில், 'மாணவர்கள் சுயமாக முடிவெடுக்கும் வகையில் அவர்களுடைய திறனை
அதிகரிப்பதற்காக, பகவத் கீதையை கற்பிக்க முடிவு செய்யப்பட்டது' என்று
கூறப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த, உச்ச நீதிமன்றம், நாடு
முழுவதும் உள்ள பள்ளி களின் பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க
அனுமதிக்க முடியாது என்று உத்தரவிட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...