Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சூரிய ஒளியில் இயங்கும் விமானம் தனது உலக சுற்றுப்பயணத்தை இன்று காலை தொடங்கியது: நாளை இந்தியாவுக்கு வருகை



         சூரிய ஒளியில் இயங்கும் விமானம் உலகளவிலான தனது முதல் சுற்றுப்பயணத்தை அபுதாபியிலிருந்து இன்று அதிகாலை தொடங்கியது. அங்கிருந்து ஓமன் செல்லும் இவ்விமானம் நாளை இந்தியாவுக்கு வந்து சேர்கிறது.
 
 
          ஏறத்தாழ 5 மாதங்கள் சூரிய ஒளியை கொண்டே உலகை சுற்றும் இந்த விமானம், சுமார் 22,000 மைல் தூரத்தை தனது பயணத்தில் கடக்கிறது. 500 மணி நேரம் வானில் பறக்கும் விமானம், ஒரு சொட்டு விமான எரிபொருளை கூட உபயோகப்படுத்தாமல் மூன்று கண்டங்களையும், இரண்டு கடற்பரப்புகளையும் கடக்க உள்ளது. இந்த விமானத்தில் ஒவ்வொரு பைலட்டும் தனியாக ஐந்து நாட்கள் பயணம் செய்கின்றனர். தங்களது பயணத்தை தொய்வின்றி தொடர யோகாவையும், சுய மனவலிமையை ஏற்படுத்தும் பயிற்சியையும் மேற்கொள்வார்கள்.  
         ஒரு இலக்கிலிருந்து மற்றொரு இலக்கை அடைந்தவுடன் 20 நிமிடம் மட்டும் ஓய்வெடுக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த விமானம் பறக்கும்போது விமானியால் அதன் காக்பிட்டில் எழுந்து நிற்க கூட முடியாது. ஆனால் கழிவறைக்கு செல்வதற்காக இருக்கையை தள்ளிவிட்டுக்கொள்ள முடியும். விமானத்தில் அழுத்தமடைந்த காக்பிட் இல்லாததால், வெப்பநிலை மாற்றங்களை பைலட்களை அனுபவித்து தான் தீரவேண்டும்.

அதே சமயம் பைலட்களின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தரையிலுள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும். கடலுக்கு மேலே பறக்கும்போது, பகல் நேரங்களில் வெப்பத்தை கிரகிப்பதற்காக 28000 அடி உயரத்தில் பறக்கும் விமானம், இரவு நேரங்களில் 5000 அடி உயரத்தில் பறக்கும் என தெரிகிறது.

நாம் வானில் பறக்கும் வாரம் முழுவதும், காக்பிட்டை நமது வீடு போல மாற்றிக்கொள்ளவேண்டும் என இரு விமானிகளில் ஒருவரான ஸ்விட்சர்லாந்தின் பெர்ட்ராண்ட் பிக்கார்ட் கூறியுள்ளார். இந்த விமானத்தில் பறக்க உள்ள மற்றொரு விமானியான ஆண்ட்ரே போர்ச்பெர்க்கும் ஸ்விஸ் நாட்டை சேர்ந்தவர் தான்.

முன்னதாக இன்று விமானம் புறப்பட்ட நேரத்தில், காக்பிட்டில் உட்கார்ந்திருந்த விமானி போர்ச்பெர்க்குக்கு மொனாக்கோ இளவரசர் ஆல்பர்ட் ஆன்லைனில் பேசி வாழ்த்து தெரிவித்தார். நாளை இந்தியா வரும் இந்த விமானம் பின்னர் இங்கிருந்து பர்மா, சீனா ஆகிய நாடுகளுக்கு செல்கிறது. அங்கிருந்து 5 நாட்கள் பயணத்திற்கு பின் ஹவாய் தீவுகளுக்கு செல்லும். அதன் பின் அமெரிக்காவில் உள்ள போனிக்ஸ், அரிசோனா மற்றும் நியூயார்க் நகரை சென்றடையும்.

பின்னர் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு அட்லான்டிக் பெருங்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பயணம் செய்து இறுதியாக தான் புறப்பட்ட இடமான அபுதாபிக்கு திரும்பும் என்பது குறிப்பிடத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive