தமிழக ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என த.மா.கா. தலைவர் வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு
6வது ஊதியக் குழுவில் திருத்தம் மேற்கொண்டு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு
இணையான ஊதியம் வழங்க வேண்டும். தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்டு
பணிபுரியும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு அவர்களை நியமனம் செய்த தேதி
முதல் கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.
தமிழக அரசு மற்றும் அரசு சார் பள்ளிகளில்
பணிபுரியும் தையல் ஓவியம் உடற்கல்வி இசை போன்ற தொழிற்கல்வி கற்பிக்கும்
16549 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் 2012ம் ஆண்டு
நேர்முக தேர்வு மூலம் பணியில் சேர்ந்தனர். தற்போது பள்ளி கல்வித்துறை
போட்டி தேர்வு நடத்தி அவர்களை பணி நியமனம் செய்வதாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே பள்ளி கல்வித்துறை சில ஆண்டுகளுக்கு
முன் போட்டி தேர்வு மூலம் கணினி ஆசிரியர்கள் 652 பேரை தேர்வு செய்தது.
பின்பு போட்டி தேர்வில் கேள்விகள் சரியானதாக இல்லை எனக்கூறி அவர்களை
பணியிலிருந்து நீக்கி விட்டனர். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக
இருக்கிறது. எனவே ஆசிரியர்களை தகுதி தேர்வு முறையில் தேர்ந்தெடுப்பதை
தவிர்க்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...