இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் மனித மூளையின் வலியை உணரச் செய்யும் பகுதியை கண்டறிந்துயுள்ளனர். இதன் மூலம் தாங்க முடியாத வலியால் சிரமப்படும் நோயாளிகளின் வலியை மறக்கடிக்க செய்ய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
மேலும், தங்கள் வலியை வெளிப்படுத்த முடியாத நிலையில் உள்ள கோமா நோயாளிகள் போன்றோரின் வலியையும் இதன் மூலம் அறிந்துக்கொள்ள முடியும். இந்த ஆராய்ச்சியின் தலைமை விஞ்ஞானி ஐரின் டிரேஸி கூறும்போது "வலி, மனித உணர்ச்சிகளில் மிகவும் சிக்கலானது. இது மனிதர்களின் மற்ற செயல்பாடுகளையும் பாதிக்கிறது. குறிப்பாக கவனிப்பு திறன், பயம், உணர்ச்சி வசப்படுதல் போன்றவற்றில் வலி ஆதிக்கம் செலுத்துகிறது. எனவே இது முக்கிய கண்டுபிடிப்பு" என்று தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...