அடுத்தது என்ன படிக்க வேண்டும் என்று நிறைய மாணவ மாணவிகள் முன்கூட்டியே
முடிவெடுத்து விடுவதால் நினைத்தது நடக்க வேண்டும் என்றால் முக்கிய
தேர்வுகளில் நூற்றுக்கு நூறு எடுப்பது தான் இன்றைய போட்டி சூழலில்
அவசியமாகிறது.
ஆங்கிலம் அல்லது தமிழ் போன்ற மொழித் தேர்வுகளில் கூட அதிக மதிப்பெண் பெற
வேண்டும் என்றாலும் குரூப் பாடங்களில் அதிகபட்ச மதிப்பெண்கள் பெறுவது தான்
கனவை நனவாக்கும். ஆகவே எல்லா தேர்வுகளுமே முக்கியம் என்ற மனோபாவத்தோடு
இருப்பது வேண்டும்.
இன்று கட் ஆப் மதிப்பெண்கள் பார்த்துத் தான் கல்லூரி அட்மிஷன் தரப்படுகிறது
என்பதால் மிகச் சரியாக திட்டமிட்டு, சரியான யுக்தியுடன், புத்தி
சாதுரியத்துடன் தேர்வை அணுகி எல்லாப் பாடங்களிலும் அதிக பட்ச மதிப்பெண் பெற
எல்லா முயற்சியும் மேற்கொள்ள வேண்டும். இது மாணவர்களுக்கு ஏற்கனவே
தெரியும் என்றாலும் குறுக்கு வழியில் பார்த்துக் கொள்ளலாம். பணம் கட்டி
சீட் வாங்கி விடலாம் என்ற ஈஸி மனப்பாங்கு நிச்சயம் வேண்டாம்.
உங்கள் பெயர் பள்ளி பலகையிலோ, பத்திரிகையிலோ வராது போகலாம். ஆனால் அதற்காக
ஆசைப்பட்டால் என்ன தவறு? எது செய்தாலும் நான் அதில் சிறந்து விளங்குவேன்
என்பதே மிக நல்ல மனோபாவம். நீங்கள் மிகப் பெரிய வெற்றி பெற்றால் உங்களுக்கு
மட்டுமா பெருமை ? உங்கள் குடும்பத்திற்கு, ஆசிரியருக்கு, பள்ளிக்கு,
உங்கள் மாநிலத்திற்கே பெருமை அன்றோ?
பள்ளி இறுதித் தேர்வில் நீங்கள் பெறும் மதிப்பெண்கள் உங்கள் வாழ்நாள்
முழுதும் எல்லா இடங்களிலும் கேட்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அடுத்த படிப்பிற்கு, செல்லும் வேலைக்கு என்று எல்லா கட்டங்களிலும் உங்களை
முன்னிலை படுத்தப் போகிற ஒரு தேர்வு இது என்பது மனதில் இருக்கட்டும். அதனை
நினைவில் கொண்டு உங்கள் செயல்பாடுகள் அமையட்டும்.
இது போட்டி யுகம் நூற்றுக்கு நூறு என்பது கூட சற்று குறைவு தான் எனும் நிலை
ஆகி விட்டது. எனவே நீங்கள் யாருக்கும் எந்த விதத்திலும் குறைந்தவர் அல்ல
என்று உங்களுக்கும் உங்களைச் சுற்றி இருக்கும் உலகுக்கும் நிரூபிக்கும் மிக
முக்கிய சமயம் இது. பெஸ்ட் மட்டுமே கொடுங்கள். பெஸ்ட் மட்டுமே கிடைக்கும்.
சந்தேகம் வேண்டாம்.
எனவே மிகப் பெரிய வெற்றி உங்களுக்கு வரும் தேர்வில் கிடைக்க வேண்டுமா? ஒழுக்கமாக இருங்கள்...
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...