இந்த காலத்துல சாப்பாடு தண்ணி இல்லாமகூட வாழ்ந்துட்டு போகலாம். ஆனா,
இண்டர்நெட், கூகுள் இல்லாத ஒரு வாழ்க்கையை நெனச்சுக்கூட பார்க்க முடியாது.
அந்த வகையில இண்டர்நெட்டை உபயோகிப்பதில் இருக்கும் சில இன்ட்ரஸ்டிங்கான
ட்ரிக்ஸ்களை பார்த்து, ட்ரை செய்து என்ஜாய் பண்ணுங்களேன்...
1. கண்ட்ரோல் + ஷிஃப்ட் + T யை அழுத்தினால் கடைசியாக நீங்கள் க்ளோஸ் செய்த
டேப் ஓபன் ஆகும். நீங்கள் மேக் சிஸ்டம் யூஸ் செய்யும் பட்சத்தில், கமெண்ட் +
ஷிஃப்ட் + T யை அழுத்தவும். இது க்ரோம் மற்றும் ஃபயர் ஃபாக்ஸ்சில் மட்டும்
செயல்படும்.
2. 'S' பட்டனை அழுத்திக்கொண்டே, உங்களுக்கு விருப்பமான
புகைப் படத்தின் மீது, உதாரணத்திற்கு 'S' பட்டனை அழுத்திக்கொண்டே ஒரு
குழந்தை படத்தின் மேல் கர்சரை வைத்து, மவுஸின் வலது பக்க பட்டனை
அழுத்தினால், உடனடியாக பலதரப்பட்ட குழந்தைகளின் படங்கள் வரிசைகட்டி
நிற்கும்.
அல்லது விரும்பிய படத்தின் மீது கரர்ஸரை வைத்து அப்படியே அந்த படத்தை
நகர்த்தி சர்ச் டேப்பில் இழுத்துப் போட்டால் அதே போன்ற படங்கள் வந்து
நிற்கும்.
3. daskeyboard.com எனும் வலைத்தளத்துக்கு போய், ஹோம் பேஜின் அடியில்
இருக்கும் கனெக்ட் கேட்டகிரியில் destroy this site என்பதை க்ளிக் செய்து
அந்த வளைத்தளத்தை சுட்டு பொசுக்கலாம்.
4. google in 1998 என சர்ச் பாரில் டைப் செய்தால், காலச் சக்கரத்தில் பின்னோக்கி போனதுபோல, ரெட்ரோ டைப் கூகுள் சர்ச் ஓபன் ஆகும்.
5.
data:text/html,%20<html%20contenteditable><Title>Notepad</Title>
என்ற லிங்க்கை க்ளிக் செய்தால் பிரவுஸரையே நோட் பேடாக யூஸ் செய்ய
முடியும்.
6. இதே விஷயத்தை இரவு நேரத்தில் அல்லது வெளிச்சம் இல்லாத சமயத்துல பண்ணனும்னா இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்.
data:text/html;charset=utf-8,%20<title>Notepad%20(Nightmode)</title><body%20contenteditable%20style="font-family:%20DejaVu;font-weight:bold;background:#1E1E1E;color:#FFFFFF;font-size:1rem;line-height:1.4;max-width:80rem;margin:0%20auto;padding:2rem;"%20spellcheck="false">
7. “do a barrel roll” என கூகுள் சர்ச் பாரில் டைப் செய்து நடக்கும் மேஜிக்கை பாருங்கள்.
8. “Atari Breakout” என கூகுள் இமேஜ் பாரில் டைப் செய்து, கிளாசிக் விளயாட்டை விளையாடி மலரும் நினைவுகளில் மூழ்கலாம்.
9.URL பாரில் எந்த ஒரு வார்த்தையும் டைப் செய்து கூடவே கன்ட்ரோல் + எண்டர்
பட்டனை அழுத்தினால் அந்த வார்த்தைக்கு பொருத்தமான வலைத் தளங்கள் வரிசை
கட்டும். அதாவது டாட் காம் என டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை.
10. ஒரு லிங்க்கை புது டேபில் ஓபன் செய்ய, கண்ட்ரோல் கீயை பிரஸ்
செய்துகொண்டே அந்த லிங்கை க்ளிக் செய்தால் அது புது டேபில் ஓபன் ஆகும்.
மேக் சிஸ்டம் யூஸ் செய்பவர்கள் ஆப்பிள் அல்லது கமெண்ட் கீயை பிரஸ் செய்து லிங்க்கை க்ளிக் செய்தால் புதுடேபில் ஓபன் ஆகும்.
இந்துலேகா. சி
very Interesting information......!!!
ReplyDelete