வரும் கல்வியாண்டில் (2015-16) ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாயமாக்கப்படுகிறது என்பதால், அதற்கான பாடப் புத்தகங்கள் தயாராகி உள்ளன.
இதுகுறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
ஒன்று முதல் பத்து வரையிலான வகுப்புகளில்
கற்பிக்கப்படும் பாடங்களில் ஒன்றாக தமிழ் மொழி இருக்கும் வகையில், சட்டம்
கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, வரும் கல்வியாண்டில் இருந்து
ஒன்றாம் வகுப்பில் தொடங்கி படிப்படியாக தமிழ் கற்பிக்கப்படுதல் வேண்டும்
என அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, வரும் கல்வியாண்டில் (2015-16)
பல்வேறு வாரியங்களைச் சேர்ந்த அனைத்துப் பள்ளிகளும் கட்டாயமாக தமிழ் மொழிப்
பாடம் கற்றலை 1-ஆம் வகுப்பில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
எனவே, 1-ஆம் வகுப்பு தமிழ் பாடநூல்கள்
அச்சடிக்கப்பட்டு தமிழ்நாடு பாடநூல்-கல்வியியல் பணிகள் கழகத்தின் சென்னை,
மதுரை வட்டார அலுவலகத்தில் விற்பனைக்குத் தயார் நிலையில் உள்ளன.
யார் யார் எங்கு வாங்கலாம்?: சென்னை
வட்டார அலுவலகமானது, வேளச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ளது. சென்னை,
திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம்,
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம்,
நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் சென்னை வட்டார
அலுவலகத்தில் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
மதுரை வட்டார அலுவலகத்தில், திருச்சி,
பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, கோவை, திருப்பூர், நீலகிரி,
திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்,
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள
பள்ளிகள் பெற்றுக் கொள்ளலாம். 1 ஆம் வகுப்பு தமிழ் பாடநூலின் விலை ரூ.60.
வட்டார அலுவலகங்கள் முகவரி: மதுரை: பாண்டியன்
சூப்பர் மார்க்கெட், செந்தாமரை கிடங்கு, முடக்கு சாலை, தேனி சாலை, மதுரை,
தொலைபேசி-0452-2381484, செல்லிடப்பேசி: 9894057786.
சென்னை: வேளச்சேரி பிரதான
சாலை, எஸ்.ஆர்.பி.டூல்ஸ் அருகில், திருவான்மியூர், சென்னை,
தொலைபேசி-044-22541326, செல்லிடப்பேசி: 9962478471, 9566116271.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...