தூத்துக்குடி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் 34 பேர் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இம்மாவட்டத்தில் கடந்த ஆண்டு தொடக்கப்
பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்பட்ட 34 ஆசிரியர்களுக்கு இதுவரை பணி
ஆணையும், ஊதியமும் வழங்கப்படாமல் உள்ளதாம். இதுதொடர்பாக பல்வேறு
போராட்டங்களை ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மட்டக்கடை
பகுதியில் உள்ள மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்குச் சென்ற 34
ஆசிரியர்களும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாவட்ட
தொடக்கக் கல்வி அலுவலர் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் எனவும் அவர்கள்
வலியுறுத்தினர்.
இதற்கிடையே, அங்கு சென்ற மத்திய பாகம்
போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்
அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...