கலை மற்றும் கைவினை பொருட்கள் தொடர்பான
கல்விக்கு, புதிய பல்கலையை உருவாக்கும் முயற்சியில், மத்திய மனித வள
மேம்பாட்டுத்துறை இறங்கி உள்ளது. இதற்காக, குழு ஒன்றும் அமைக்கப்பட்டு
உள்ளது.
கல்லுாரிகள்:ஓவியம், சிற்பம், இசை போன்ற
கலைகளுக்கு என, தனித்தனியாக கல்லுாரிகள் உள்ளன. இசைக்கு தனியாக பல்கலையே
உள்ளது. ஆனால், ஓவியம், சிற்பம் மற்றும் கைவினை பொருட்கள் குறித்த
கல்விக்கு, தனியாக தேசிய அளவில் பல்கலை இல்லை. தமிழகத்தில், அரசு சார்பில்,
இசைக் கல்லுாரி, ஓவியம், சிற்பம் மற்றும் கணினி வரைகலை கல்வியை
உள்ளடக்கிய,
கவின்கலைக் கல்லுாரி
யும் தனித்தனியாக இயங்கி வந்தது. சமீபத்தில், இசை மற்றும் கவின்கலை
பல்கலையை தமிழக அரசு உருவாக்கி, அதில் இந்த கல்லுாரிகளை இணைத்தது.
இந்நிலையில், மத்திய அரசு, கலை மற்றும்
கைவினைக்கு (ஆர்ட் அண்டு கிராப்ட்) என, தனியாக பல்கலையை துவக்கும்
முயற்சியில் இறங்கி உள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு
செய்ய, புதிய குழு ஒன்றை அமைத்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை
உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்த உத்தரவு விவரம்: மனிதவள
மேம்பாட்டுத் துறை கூடுத செயலர் (தொழில்நுட்பம்) அமர்ஜித் சின்ஹாவை
தலைவராகவும், ஜவுளித்துறை, கைவினை பொருட்கள், உயர்கல்வித் துறைகளைச்
சேர்ந்த, நால்வரை உறுப்பினர்களாகவும் கொண்டு இந்த குழு அமைக்கப்பட்டு
உள்ளது.
அறிக்கை:இந்த குழு, பல்கலையை துவக்குவதற்கான
வாய்ப்புகள், தேவைகள் குறித்து ஆய்வு செய்யும். மூன்று மாதங்களுக்குள்
அறிக்கையை அரசுக்கு அளிக்கும். இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...