திருச்சியில்
உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர், கொளுத்தும் வெயிலில்
பல மணிநேரம் காத்து நின்று விண்ணப்பங்களை வாங்கி செல்கிறார்கள்.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை தரமான பள்ளிகளில் சேர்த்து கல்வி கற்க வைக்கவே விரும்புவார்கள். இதற்கு தங்கள் பிள்ளைகள் நுனிநாக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச வேண்டும் என்ற பெற்றோரின் ஆசையே காரணம். தமிழகத்தில் பெரும்பாலும் தனியார் நடத்தும் ஆங்கில வழிப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுபோன்ற தனியார் பள்ளிகளில் மார்ச்சில் ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து விடுமுறை விட்டபிறகு, ஜூன் மாதத்தில் மாணவர் சேர்க்கை தொடங்கும். அப்போது பெற்றோர் அந்த பள்ளிகளுக்கு திரண்டு சென்று போட்டி போட்டு விண்ணப்பம் வாங்கி செல்வார்கள். சில பள்ளிகள் முன்பு முதல்நாள் இரவே வந்து படுத்து கிடந்து விண்ணப்பங்களை வாங்கி செல்வார்கள். இதனால் ஜூன் மாதத்தில் பல பள்ளிகளின் முன்பு பெற்றோர் தவம் கிடக்கும் நிலை இருந்து வருகிறது. பல பள்ளிகளில் இப்போது மாணவர்களின் பெயர்களை பதிவு செய்யத்தொடங்கி விட்டனர். விண்ணப்பம் வழங்கும் போது இவ்வாறு பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படும். அதனால் பெற்றோர் பெயர்களை பதிவு செய்து வருகிறார்கள்.
காத்து இருந்த பெற்றோர்
திருச்சி மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் உள்ள பெரும்பாலான பள்ளிகளிலும் இதேபோன்ற நிலையை பார்க்க முடியும். தற்போது திருச்சி மாநகர பகுதிகளில் உள்ள ஒரு சில ஆங்கில வழிப்பள்ளிகளில் ஜூன் மாதத்தில் விண்ணப்பம் வழங்கும்போது, ஏற்படும் நெருக்கடியை குறைக்கும் வகையில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை தற்போதே பள்ளிகளில் வழங்க தொடங்கி விட்டனர்.
நேற்று ஒரு தனியார் பள்ளி முன்பு அதிகாலை முதலே பெற்றோர் நீண்ட வரிசையில் காத்து இருந்து எல்.கே.ஜி. வகுப்பில் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை வாங்கினார்கள். விண்ணப்பம் வாங்க அதிகமான பெற்றோர் திரண்டதால் மதியப்பொழுதில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் வரிசையில் நின்று விண்ணப்பம் வாங்கி சென்றனர்.
ஆன்-லைன் மூலம்...
பெற்றோரின் இந்த சிரமத்தை போக்கும் வகையில், ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யும் முறையை தனியார் பள்ளிகள் அறிமுகப்படுத்த வேண்டும் என்று பெற்றோர் பலர் கோரிக்கை வைத்து உள்ளனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...