Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

போலீஸ் எஸ்.ஐ தேர்வில் தேர்ச்சிபெறும் வழிமுறைகள்

 
       நேர்மையான, மனிதாபிமான உணர்வுடன் போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கு இளையவர்கள் தயாராகி கொண்டிருப்பீர்கள். 1,078 பணியிடங்களுக்கு 1.70 லட்சம் பேர் போட்டியிடுகின்றனர்.

        எப்படி தேர்வு நடக்கும், எந்தெந்த பகுதிக்கு எத்தனை மார்க் என்ற குழப்பம், தேர்வாளர்கள் ஒவ்வொருவரிடமும் கேள்வியாக மனதில் ஓடிக்கொண்டிருக்கும். எழுத்துத்தேர்வில் 35 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் எடுப்பவர்களில் இருந்து இடஒதுக்கீடு அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். பின் உடற்தகுதி தேர்வு நடக்கும். இதில் தகுதியானவர்கள் 1:2 எண்ணிக்கையில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.பொதுப்பிரிவில் எழுத்துத்தேர்வுக்கு மொத்தம் 70 மதிப்பெண். உடல்திறன் போட்டிக்கு 15 மதிப்பெண். சிறப்பு மதிப்பெண் 5. அதாவது என்.சி.சி., 2,விளையாட்டு 2, என்.எஸ்.எஸ்., 1 மதிப்பெண். போலீஸ் துறை ஒதுக்கீட்டில் எழுத்துத் தேர்வுக்கு 85 மதிப்பெண். தேசிய அளவில் போலீசாருக்கான பணித்திறன் போட்டிகளில் தங்கப் பதக்கத்திற்கு 3, வெள்ளிப் பதக்கத்திற்கு 3, வெண்கலத்திற்கு 2 மதிப்பெண் என சிறப்பு மதிப்பெண் 5 உண்டு.நேர்காணலில் 10 மதிப்பெண் என்று மொத்தம் 100 மதிப்பெண். எழுத்துதேர்வில் கூடுதல் மதிப்பெண் எடுத்தால்தான் அடுத்தக்கட்ட தேர்வுக்குசெல்ல முடியும். இதனால் இத்தேர்வு மிக மிக முக்கியம்.எதில் இருந்து கேள்விஇதுவரை நடந்த சீருடை பணியாளர் தேர்வாணைய தேர்வுகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பாடத்திட்டங்களில் இருந்து கேள்வி கேட்டுள்ளனர். அதேபோல் எஸ்.ஐ., தேர்விலும் கேள்வி கேட்க வாய்ப்பு உண்டு. போலீஸ் துறை ஒதுக்கீட்டில் தேர்வு எழுதுபவர்களுக்கு பொது அறிவு வினாத்தாள் உண்டு.பொதுப்பிரிவுக்கான பாடத்திட்டம்தான் போலீஸ் ஒதுக்கீட்டு தேர்வாளர்களுக்கு என்றாலும், சட்டம், போலீஸ் நிர்வாகம், நடைமுறை, வழக்கு விசாரணை தொடர்பானவை கேள்விகளாக வரக்கூடும். எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றாச்சு...
அடுத்து உடற்தகுதி தேர்வு.உயரம், மார்பளவு போன்றவை நிர்ணயிக்கப்பட்ட அளவை குறைந்தாலும் வாய்ப்பு பறிபோய்விடும். இதைதவிர்க்க, பயிற்சி மூலம் அதை சரிசெய்யலாம். முயற்சியும்,கடின பயிற்சியும் இருந்தால் வெற்றி எளிதாகலாம்.
தேர்வு, கேள்வி எப்படி?
அனைத்து பிரிவு பாடங்களையும் படித்தால் வெற்றி நிச்சயம். பொதுப்பிரிவினருக்கு பொது அறிவு பகுதிக்கு 40 மதிப்பெண். உளவியல் அறிவுக்கூர்மைக்கு 30 மதிப்பெண். மொத்த கேள்விகள் 140. ஒரு கேள்விக்கு அரை மதிப்பெண் வீதம் மொத்த மதிப்பெண் 70. தேர்வு 2.30 மணிநேரம்.போலீஸ் துறை ஒதுக்கீட்டு பிரிவினருக்கு பொது அறிவு 15 மதிப்பெண். இந்தியதண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், போலீஸ் உத்தரவுகள், போலீஸ் நிர்வாகம் ஆகியவற்றுக்கு 70 மதிப்பெண்கள். மொத்தம் 170 கேள்விகள். ஒவ்வொரு கேள்விக்கும் அரைமதிப்பெண் வீதம் 85 மதிப்பெண். தேர்வு 3 மணிநேரம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive