விருதுநகர்
மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ, மாணவிகளின்
எண்ணிக்கைக்கு கேற்ப முகப்புத் தாள் மற்றும் விடைத்தாளர்கள் சரியாக உள்ளதா
என்பதை தலைமை மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் சரிபார்க்க வேண்டும் என
முதன்மைக் கல்வி அலுவலர் கேட்டுக் கொண்டார்.
விருதுநகர் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் பால்ராஜ் ஆகியோர் தலைமை வகித்தார். இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் பேசுகையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19-ம் தேதி முதல், தொடர்ந்து ஏப்ரல் 10-ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.
ஒரு வாரமே உள்ளதால் அதற்கான பணிகள் அனைத்தும் தயாராக உள்ளன. இத்தேர்வில் ஆள்மாறாட்டம், முறைகேடுகளை தடுக்கும் வகையில் மாணவ, மாணவிகளின் புகைப்படம், பெயர், பதிவெண், பாடத்தின் பெயர் விபரங்களுடன் முகப்புத்தாளும், கூடுதல் பக்கங்கள் எழுதுவதை தவிர்க்கும் வகையில் தமிழ், ஆங்கிலம் ஆகிவைகளுக்கு கோடிட்ட விடைத்தாள்கள் 22 பக்கங்கள் இணைத்து வழங்கப்படுகிறது. கணக்கு, அறிவியல் பாடங்களுக்கு கோடு போடாத 30 பக்கங்களும், சமூக அறிவியலுக்கு 4 பக்க வரைபடத்துடன் 30 பக்கமும் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான பணிகள் அந்தந்த பள்ளிகளில் தைக்கப்பட்டு தயாராக உள்ளன.
அதோடு, நிகழாண்டு முதல் 10-ம் வகுப்பு தேர்வில் காலை 9.15 மணி முதல் 12 மணி வரையில் புதிதாக பின்பற்றப்படுகிறது. இதனால், மாணவ, மாணவிகள் ஆகியோர் காலையில் 8.30 மணிக்கு தேர்வு மையங்களுக்குள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 9.15 மணி முதல் 9.25 வரையில் வினாத்தாள் வாசிக்கவும், 9.30 மணி வரையில் முகப்புத்தாளில் விபரங்கள் மற்றும் அந்தந்த பாடங்களுக்குகேற்ப விடைத்தாள்கள் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
எனவே தேர்வு மையங்களில் முகப்புத்தாள், விடைத்தாள்கள் ஆகியவை மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைகேற்ப உள்ளதா என்பதை அலுவலர்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இத்தேர்வை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி உண்மையாகவும், நேர்மையான முறையிலும் அலுவலர்கள் பணியாற்ற வேண்டும். மேலும், நிகழாண்டிலும் முதலிடத்தை பெற வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
இதில், தலைமையாசிரியர்கள், தேர்வு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் செய்திருந்தனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...